சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வரும் பல டாப் நடிகர், நடிகைகள் பிசினஸிலும் கொடிகட்டி பறக்கின்றனர். அவர்களைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
விஜய், அஜித் தொடங்கி நயன்தாரா வரை கோலிவுட் பிரபலங்கள் பலரும் சினிமாவில் ஜொலித்து வருவது போல் பிசினஸிலும் கொடிகட்டிப் பறந்து வருகின்றனர். சிலர் சினிமாவை விட பிசினஸில் பல கோடி சம்பாதித்தும் வருகின்றனர். அவர்கள் யார் யார் என்னென்ன பிசினஸ் செய்கிறார்கள் என்பதை தற்போது பார்க்கலாம்.
211
Nayanthara
நயன்தாரா
லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா, பல்வேறு தொழில்களை செய்து வருகிறார். சொந்தமாக லிப்ஸ்டிக் கம்பெனி ஒன்றை நடத்தி வரும் நயன், புகழ்பெற்ற டீ நிறுவனம் ஒன்றில் பார்ட்னராகவும் உள்ளார். இதுதவிர துபாயில் எண்ணெய் பிசினஸிலும் முதலீடு செய்துள்ளாராம். மேலும் ரெளடி பிக்சர்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார் நயன்.
311
vijay
விஜய்
நடிகர் விஜய் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் ஒரு நடிகராக திகழ்ந்து வருகிறார். இவரும் பிசினஸில் பல கோடிகளை முதலீடு செய்துள்ளார். சென்னையில் பல்வேறு இடங்களில் திருமண மண்டபங்களை கட்டி விட்டுள்ள விஜய்க்கு அதன்மூலம் நன்கு லாபம் பார்த்து வருகிறார். சில இடங்களில் தனது மண்டபங்களை சூப்பர் மார்க்கெட்டிற்கு வாடகைக்கு விட்டுள்ளார்.
411
Ajithkumar
அஜித்
நடிகர் அஜித் சினிமாவில் கோடிக்கணக்கில் சம்பாதித்தாலும், மறுபுறம் பிசினஸிலும் பல கோடிகளை முதலீடு செய்துள்ளார். சமீபத்தில் ஏகே மோட்டோ ரைடு என்கிற பைக் சுற்றுலா நிறுவனம் ஒன்றை தொடங்கினார் அஜித். அவர் வைத்துள்ள வெளிநாட்டு பைக்கில் சுற்றுலா செல்ல ரூ.8 லட்சம் வரை வாடகையும் வாங்கி வருகிறாராம் அஜித்.
511
samantha
சமந்தா
நடிகை சமந்தா ஆடை நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அதுமட்டுமின்றி டெலிவரி நிறுவனம் மற்றும் குழந்தைகளுக்கான கிட்ஸ் ஸ்கூல் ஒன்றிலும் பார்ட்னராக இருந்து அதன் மூலம் கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகிறாராம் சம்மு.
611
Hansika
ஹன்சிகா
நடிகை ஹன்சிகாவும் சைலண்டாக பிசினஸ் செய்து வருகிறார். இவர் திருமணம், பிறந்தநாள் போன்ற விழாக்களுக்கு அலங்காரம் செய்யும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றார். இதன்மூலம் அவருக்கு நல்ல லாபமும் கிடைத்து வருகிறதாம்.
711
Kajal Aggarwal
காஜல் அகர்வால்
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வாலும் பிசினஸ் செய்து வருகிறார். இவர் கண் மை-க்காக பிரத்யேகமாக நிறுவனம் ஒன்றை தொடங்கி அதன்மூலம் அழகு சாதன பொருட்களை விற்பனை செய்து வருகின்றார்.
நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் ஜொலித்து வரும் நடிகர் சூர்யா, விமான நிலையங்களில் உள்ள பார்க்கிங் டெண்டர்களை எடுத்து அதன் மூலம் பல கோடி வருமானம் ஈட்டி வருவதாக கூறப்படுகிறது. இதுதவிர மும்பையில் பல தொழில்களில் முதலீடும் செய்துள்ளாராம்.
911
Arya
ஆர்யா
சினிமாவில் பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்து பிரபலமான நடிகர் ஆர்யா, ஓட்டல் பிசினஸ் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான உணவகங்கள் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வருகிறது.
1011
Anushka Shetty
அனுஷ்கா
நடிகை அனுஷ்காவிற்கு தற்போது சினிமா கெரியர் பெரியளவில் கைகொடுக்கவில்லை என்றாலும் பிசினஸில் பல கோடிகளை சம்பாதித்து வருகிறாராம். அவர் ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்து வருகிறாராம்.
1111
Ramcharan
ராம்சரண்
நடிகர் சிரஞ்சீவியின் மகனான ராம்சரண் சினிமாவில் நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். இவர் சொந்தமாக ஏர்லைன் பிசினஸ் ஒன்றையும் நடத்தி வருகிறார். அந்நிறுவனம் மூலம் இவருக்கு கோடிக்கணக்கில் வருமானமும் கிடைத்து வருகின்றது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.