தமிழில் இயக்குனர் மிஷ்கின், நடிகர் ஜீவாவை வைத்து இயக்கிய திரைப்படம் 'முகமூடி' . இந்த படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தவர் பூஜா ஹெக்டே. தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார்.
இந்தியில் அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த ''ஹவுஸ்ஃபுல்'' படம் கோடிகளை குவித்தது. இந்தப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதேபோல் தெலுங்கில் அவர் நடித்த "ஆல வைகுந்தபுரமுலு" படம் நல்ல வரவேற்பை பெற்றது.
சோசியல் மீடியாவில் படு ஆக்டீவாக இருக்கும் பூஜா ஹெக்டே, அவ்வப்போது தனது அதிரிபுதிரி கவர்ச்சி புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர்.
தெலுங்கிலும், இந்தியிலும் படு பிசியாக நடித்து வந்த பூஜா ஹெக்டே, தற்போது தமிழிலும் தளபதி விஜய்க்கு ஜோடியாக 'பீஸ்ட்' படத்தில் நடித்து வருகிறார்.
எனவே இவர் சோசியல் மீடியாவில், எப்படி பட்ட புகைப்படம் வெளியிட்டாலும் அது வேற லெவலுக்கு அனைத்து தரப்பு ரசிகர்களாலும் ரசிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தற்போது வெள்ளை நிற ரோஜா மலரை போல்... லெஹன்கா அணிந்து... அதற்க்கு மாட்சிங்காக சல்லடை போன்ற அழகிய வெள்ளை நிற தாவணியில் இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் தாறுமாறாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.