விஜய் 66 கேரக்டர்..பக்காவான பதிலை சொல்லி தப்பித்த சரத்குமார்!

Kanmani P   | Asianet News
Published : Jun 06, 2022, 01:12 PM IST

 'தளபதி 66 படத்தில் என்ன கேரக்டர் பண்ணுகிறேன் என்பதை வெளியே சொல்ல முடியாத சூழலில் உள்ளேன் என சரத்குமார் தெரிவித்துள்ளார்.

PREV
14
விஜய் 66 கேரக்டர்..பக்காவான பதிலை சொல்லி தப்பித்த சரத்குமார்!
Thalapathy Vijay

இளையதளபதி விஜய் நடிக்கவிருக்கும் முதல் தெலுங்கு படமாக 'மஹர்ஷி' இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வருகிறார்.தயாரிப்பாளர் தில் ராஜா படத்தை தயாரிக்கிறார். பீஸ்ட் வெற்றியை தொடர்ந்து விஜய் இந்த படத்தில் கமிட் ஆகியுள்ளார். சமீபகாலமாக ஆக்சன் கதைக்களத்தை தேர்வு செய்து வந்த விஜய் சென்டிமென்டுக்கு பெயர் போன இயக்குனருடன் கைகோர்த்து இருப்பது ரசிகர்களை மீண்டும் 90 ஸ் க்கு ஈர்த்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

24
Thalapathy Vijay

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேசன்ஸ் சார்பாக தில் ராஜு இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்க உள்ளார். விஜய்க்கு தமன் இசையமைப்பது இதுவே முதன்முறை. அதனால் இப்படத்தின் பாடல்களுக்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 

34
Thalapathy 66

விஜய்யின் குடும்பத்தில் சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த், சங்கீதா என பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.  தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராக உள்ள இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையிலும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றதை அடுத்து முழு படமும் சென்னையில் தான் நடைபெறும் என தெரிகிறது.

44
Thalapathy 66

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் சரத்குமார், விஜய் 66 படத்தின் கேரக்டர் குறித்த கேள்விக்கு தளபதி 66 படத்தில் நடித்து வருகிறேன். இதில் என்ன நடிக்கிறேன், எப்படி நடிக்கிறேன், என்ன கேரக்டர் பண்ணுகிறேன் என்பதை வெளியே சொல்ல முடியாத சூழலில் உள்ளேன். எப்படியும் உங்களுக்கு தெரியாமல் இருக்காது.  தளபதி 66 அப்டேட்டை இயக்குனர் அவர்களும், தயாரிப்பாளர் அவர்களும் நேரடியாக கலந்து பேசுகின்ற கலந்துரையாடலில் தெரிவிப்பார்கள்' என கூறியுள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories