Vignesh Shivan Mothers Day wishes To Nayanthara : நயன்தாராவை தங்கமே உன்னை போன்ற ஒரு அம்மாவை பெற்றதற்கு மிகவும் பாக்கியவானாக உணர்கிறேன் என்று விக்னேஷ் சிவன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Vignesh Shivan Mothers Day wishes To Nayanthara : தமிழ் சினிமாவில் நம்பர் 1 நடிகையாக உச்சத்திற்கு சென்றவர் நயன்தாரா. நடிகைகளில் அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் நயன்தாரா திகழ்கிறார். இதற்கெல்லாம் காரணம் அவர் கதையை தேர்வு செய்யும் விதம் தான். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்வு செய்து ஹிட் கொடுத்து வருகிறார். இவரைப் போன்று மற்ற நடிகைகளால் அப்படி ஹிட் கொடுக்க முடியவில்லை.
25
நயன்தாரா
சினிமாவில் பிஸியான நடிகையாக இருக்கும் போதே இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். எத்தனையோ நடிகைகள் திருமணத்திற்கு பிறகு காணாமல் போயிருந்த நிலையில் அவர்களுக்கு எல்லா உதாரணமாக இப்போது நயன்தாரா சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இவர்களுக்கு உயிர் மற்றும் உலக் என்று 2 மகன்கள் இருக்கின்றனர்.
35
அன்னையர் தின வாழ்த்து
இந்த நிலையில் தான் மே 11 ஆம் தேதியான நேற்று அன்னையர் தினத்தை முன்னிட்டு விக்னேஷ் சிவன் தனது காதல் மனைவிக்கு அன்னையர் தின வாழ்த்து பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: தங்கமே இனி அன்னையர் தின வாழ்த்துக்கள்…
உன் வாழ்க்கையின் மிக அழகான கட்டம் இதுதான்! எனக்குப் புரியுது! நீ ஒரு தாயான பிறகு உன் முகத்தில் இருக்கும் மகிழ்ச்சியை உன் முகத்தில் நான் பார்த்த வேறு எந்த வெளிப்பாட்டுடனும் ஒப்பிடவே முடியாது. இந்த சந்தோஷமும், மகிழ்ச்சியும் கடவுளின் அருளால் என்றென்றும் நம் அனைவரின் முகங்களிலும் நிலைத்திருக்கட்டும்.
55
நயன்தாராவிற்கு அன்னையர் தின வாழ்த்து
நீ தான் சிறந்த தாய். எந்த வேலையாக இருந்தாலும் நீ உன் வேலையை நிர்வகிக்கும் விதம், அதனை சரியான முறையில் சமநிலைப்படுத்தும் விதம் எனக்கு உத்வேகம் அளிக்கிறது. உயிர், உலக் நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன். உன்னைப் போன்ற ஒரு அம்மாவைப் பெற்றதற்கு மிகவும் பாக்கியவானாக உணர்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.