மினி கோடம்பாக்கமாக மாறிய அகமதாபாத் ஸ்டேடியம்... ஐபிஎல் பைனல்ஸை படையெடுத்து வந்து பார்த்த கோலிவுட் பிரபலங்கள்

First Published | May 30, 2023, 9:16 AM IST

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஐபிஎல் இறுதிப்போட்டியை நேரில் காண ஏராளமான கோலிவுட் பிரபலங்கள் சென்றிருந்தனர்.

ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் முதன்முறையாக இறுதிப்போட்டி மூன்று தினங்களாக நடந்துள்ளது. கடந்த மே 28-ந் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் தொடங்கிய இந்தப் போட்டி, இன்று அதிகாலை 2 மணிக்கு தான் முடிவடைந்தது. இந்தப்போட்டு இவ்வளவு தாமதமாக முடிவடைந்ததற்கு காரணம் மழை தான்.

3 நாட்கள் ஆனாலும், அந்த காத்திருப்புக்கு இந்த இறுதிப்போட்டி ஒர்த் ஆக அமைந்திருந்தது என்று தான் சொல்ல வேண்டும். திரில் வெற்றிக்கு பெயர்போன சிஎஸ்கே அணி, இம்முறையும் இறுதிப்பந்தில் பவுண்டரி அடித்து வெற்றி வாகை சூடியது. கடைசி 2 பந்தில் 10 ரன்கள் எடுக்க வேண்டும் என்கிற இக்கட்டான சூழ்நிலையில் இருந்த சென்னை அணிக்கு, சூப்பர் ஹீரோ போல் வந்து சிக்சர் மற்றும் பவுண்டரி விளாசி வெற்றிக்கு வித்திட்டார் ஜடேஜா.

Tap to resize

இதன்மூலம் 5-வது முறையாக ஐபிஎல் கோப்பையை தட்டிச் சென்றது சென்னை சூப்பர் கிங்ஸ். சிஎஸ்கே அணியின் இந்த வெற்றியை உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சென்னை அணி சேப்பாக்கத்தில் விளையாடினாலும் சரி அகமதாபாத்தில் விளையாடினாலும் சரி ஸ்டேடியத்திற்கு படையெடுத்து வந்து பார்ப்போம் என தமிழ் சினிமா பிரபலங்கள் ஏராளமானோர் இப்போட்டியை நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் கண்டுகளித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்... CSK vs GT IPL Final: 5ஆவது முறையாக சாம்பியனான சிஎஸ்கே படைத்த சாதனை துளிகள்!

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டியை காண சென்றிருந்த நடிகை வரலட்சுமி சரத்குமார் மற்றும் நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ஆகியோர் இணைந்து எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் இது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெறித்தனமான ரசிகரான சதீஷ், சிஎஸ்கே 5-வது முறையாக கோப்பை வென்றதை நேரில் பார்த்த சந்தோஷத்தில் ஆர்ப்பரித்து துள்ளிக்குதித்து கொண்டாடியபோது எடுத்த புகைப்படம் இது.

நடிகை நயன்தாராவின் கணவரும், இயக்குனருமான விக்னேஷ் சிவனும் ஐபிஎல் இறுதிப்போட்டியை நேரில் கண்டுகளித்தார். அப்போது தோனியின் மனைவி சாக்‌ஷி உடன் அவர் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் இது.

ஐபிஎல் இறுதிப்போட்டியை காண நடிகர் தனுஷின் மகன்களான லிங்கா மற்றும் யாத்ரா வந்திருந்தனர். சென்னை அணி கொடியுடன் அவர்கள் தனது தாய் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உடன் போட்டியை கண்டுகளித்தபோது எடுத்த புகைப்படம் இது.

ஹரஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்தி, கஜினிகாந்த் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் தனது நண்பர்கள் மற்றும் நடிகை வரலட்சுமி சரத்குமார் உடன் ஜாலியாக எடுத்துக்கொண்ட குரூப் போட்டோ.

ஐபிஎல் பைனல்ஸில் சிஎஸ்கே வீரர் தீபக் சஹாரின் சகோதரி மல்தி சஹாருடன் உடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் இது.  மல்தி சஹார் விக்னேஷ் சிவனின் ரெளடி பிக்சர்ஸ் தயாரிப்பில் வாக்கிங் டாக்கிங் ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம் என்கிற தமிழ் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை சூப்பர்கிங்ஸ் அணி பைனலின் வெற்றி பெற்று 5-வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்ற மகிழ்ச்சியில் நடிகை வரலட்சுமி சரத்குமார்.

ஐபிஎல் பைனலில் சிஎஸ்கே அணி வெற்றியடைந்ததும் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் வான வெடிகள் போடப்பட்டன. அப்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் கிளுக்கிய அழகிய செல்பி புகைப்படம் இது.

இதையும் படியுங்கள்... சிஎஸ்கேவுக்கு சாம்பியன் பட்டத்தை பெற்றுக் கொடுத்த ஜடேஜாவை அலேக்காக தூக்கிய தோனி!

Latest Videos

click me!