நயன்தாரா- விக்னேஷ் சிவன் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து ஏழுமலையானுக்கு நன்றி சொல்லி போஸ்ட் செய்துள்ளார் விக்கி.
இயக்குனர் விக்னேஷ் சிவனின் முதல் படமான நானும் ரவுடிதானில் விஜய்சேதுபதி, நயன்தாரா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தின் மூலம் வெற்றி கண்டார் விக்னேஷ் சிவன்.
28
vignesh shivan - nayanthara
முன்னதாக இருமுறை காதல் தோல்வி அடைந்த நயன்தாரா அதற்கு மிகுந்த ஆறுதல் கொடுத்த படமாகவே அமைந்தது இந்த படத்தின் மூலம் விக்னேஷ் சிவன் மீது காதல் கொண்ட நயன்தாரா கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளாக காதலித்து வருகிறார்.
38
vignesh shivan - nayanthara
அதோடு ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து பிஸினஸ் பார்ட்னர்ஸாகவும் இருவரும் பயணித்து வருகின்றனர். தற்போது நானும் ரவுடிதான் பிக்சர்ஸ் மூலம் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை தயாரித்து இருந்தனர் நயன்தாரா - விக்னேஷ் சிவன்.
48
vignesh shivan - nayanthara
முன்னதாக படத் தயாரிப்பில் ஈடுபட்ட பிறகு கோவில் குளம் என சுற்ற ஆரம்பித்த இருவரும் தாங்கள் தயாரிக்கும் படங்கள் பிளாக்பஸ்டர் கொடுக்க வேண்டும் என வேண்டுதலில் ஈடுபட்டு வந்தனர். அதன் புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வந்தது.
58
KaathuVaakula Rendu Kaadhal
இவர்கள் தற்போது தயாரித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நயன்தாரா, சமந்தா, விஜய் சேதுபதி மூவரும் நடித்திருந்தனர். நகைச்சுவையை மையமாகக் கொண்டு முக்கோண காதலாக வெளியான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்று வருகிறது.
68
KaathuVaakula Rendu Kaadhal
அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படம் கடந்த 2020ஆம் ஆண்டு துவங்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு பின் தற்போது வெளியாகியுள்ளது. நாயகி சமந்தா பிறந்தநாளன்று படம் ரிலீஸ் செய்யப்பட்டது.
78
KaathuVaakula Rendu Kaadhal
படம் வெளியான அன்று இரவே திருப்பதிக்கு சென்று விட்டனர் இந்த காதல் ஜோடிகள். தங்களது படம்வெற்றி பெற திருப்பதி ஏழுமலையானை பிரார்த்தனை செய்து கொண்ட பின்னர் நயன்தாரா எடுத்த செல்பி புகைப்படம் சமூக வலைத் வெளியாகி இருந்தது.
88
KaathuVaakula Rendu Kaadhal
இந்த படம் தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் வெற்றி பெற்றது. நான்கு ஆண்டு இடைவெளிக்கு பின் விக்னேஷ் சிவன் இயக்கிய இந்தப் படம் பாக்ஸ் ஆபிசில் பட்டையைக் கிளப்பியது. வெளியான நான்கு நாட்களில் 34 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. இதையடுத்து திருப்பதியில் ஜோடியாக எடுத்துக்கொண்ட போட்டோவை பகிர்ந்து ஏழுமலையானுக்கு நன்றி தெரிவித்து போஸ்ட் செய்துள்ளார் விக்னேஷ் சிவன்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.