சிம்புவால் தான் அது நடந்தது... பல வருட சீக்ரெட்டை திருமணத்திற்கு பின் போட்டுடைத்த விக்னேஷ் சிவன்

Published : Jun 18, 2022, 10:42 AM IST

vignesh shivan : நடிகை நயன்தாராவின் கணவரும், பிரபல இயக்குனருமான விக்னேஷ் சிவன், நடிகர் சிம்பு செய்த உதவி குறித்து சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.

PREV
14
சிம்புவால் தான் அது நடந்தது... பல வருட சீக்ரெட்டை திருமணத்திற்கு பின் போட்டுடைத்த விக்னேஷ் சிவன்

போடா போடி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். சிம்பு நாயகனாக நடித்திருந்த இப்படம் கடந்த 2012-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடி தான் திரைப்படம் அவரது வாழ்க்கையில் மறக்க முடியாத படமாக அமைந்தது.

24

ஏனெனில் இப்படத்தின் ஷூட்டிங்கின் போது தான் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் நடிகை நயன்தாராவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதையடுத்து சுமார் 7 ஆண்டுகளாக காதலித்து வந்த இந்த ஜோடி அண்மையில் திருமண பந்தத்தில் இணைந்தது. கடந்த ஜூன் 9-ந் தேதி இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

34

திருமணத்துக்கு பின்னரும் கடந்த சில தினங்களாக ஜோடியாக கோவில் கோவிலாக சுற்றி வந்த விக்கி - நயன் ஜோடி தற்போது விருந்துக்காக கேரளாவில் உள்ள நயன்தாராவின் வீட்டுக்கு சென்றுள்ளனர். அங்கு நயன்தாராவின் உறவினர்கள் விக்கி - நயன் ஜோடிக்கு தடபுடலாக விருந்து கொடுத்து வருகிறார்களாம்.

44

இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குனர் விக்னேஷ் சிவன், சிம்பு குறித்து பேசியது வைரலாகி வருகிறது. விக்னேஷ் சிவன், இயக்குனராக மட்டுமின்றி பாடலாசிரியராகவும் ஜொலித்து வருகிறார். அவர் தனக்குள் இருக்கும் பாடலாசிரியர் திறமையை தூண்டிவிட்டது சிம்பு தான் என அந்த பேட்டியில் கூறி உள்ளார். போடா போடி படத்தின் போது சிம்பு பாடல் வரிகளை எழுதும்போது, தன்னிடமும் ஏதாவது இரண்டு வரிகளை எழுதச் சொல்லுவார். அப்படி அவர் கொடுத்த நம்பிக்கை தான் இப்போது என்னால் சிறந்து விளங்க முடிகிறது என விக்கி கூறினார்.

இதையும் படியுங்கள்... மங்காத்தா அஜித் போன்று திடீரென சால்ட் அண்ட் பெப்பர் லுக்கிற்கு மாறிய சூர்யா... வைரலாகும் மாஸ் போட்டோ

Read more Photos on
click me!

Recommended Stories