சொந்த நிறுவனத்தில் விக்னேஷ் சிவன் எவ்வளவு சம்பளம் பெற்றுள்ளார் பாருங்களேன்..காத்துவாக்குல வந்த தகவல்

Kanmani P   | Asianet News
Published : May 20, 2022, 05:37 PM IST

காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திற்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் வாங்கியுள்ள சம்பளம் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.

PREV
13
சொந்த நிறுவனத்தில் விக்னேஷ் சிவன் எவ்வளவு சம்பளம் பெற்றுள்ளார் பாருங்களேன்..காத்துவாக்குல வந்த தகவல்
KaathuVaakula Rendu Kaadhal

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில்  வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம், மக்களிடையே பாசிட்டிவ் விமர்சனத்தை பெற்று தந்துள்ளது. நானும் ரௌடிதான் படத்திற்கு பிறகு இந்த கூட்டம் மீண்டும் இணைந்துள்ளது. தானா சேர்ந்த கூட்டம் படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவனின் அடுத்த படைப்பாக இந்த படம் வெளியாகியிருக்கிறது.  

23
kaathuvaakula rendu kaadhal

அனிருத்தின் 25 வது படமான காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோவுடன் இணைந்து, விக்னேஷ் சிவன், நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகியுள்ளது. முக்கோண காதல் கதையை கொண்ட \இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பியது. இப்படம் வெளியான 4 நாட்களிலேயே 34 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

33
kaathuvaakula rendu kaadhal

படத்தின் வெற்றியால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கும் விக்னேஷ் சிவன் தற்போது விலையுயர்ந்த ஃபெராரி கார் ஒன்றை வாங்கி உள்ளார்.  இந்த படைத்தோன் மூலம் பல கோடி ரூபாய் லாபத்தை ரவுடி பிக்சர்ஸ் பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திற்காக இயக்குனர் விக்னேஷ் சிவன் ரூ. 2 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories