நயன்தாராவுடன் நிறைவடைந்த 5 வருடங்கள்..! அதே நாளில் விக்னேஷ் சிவன் கூறிய சூப்பர் நியூஸ்..!

விஜய்சேதுபதி மற்றும் நயன்தாரா நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு vel இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ’நானும் ரவுடிதான்’.
 

திரைப்படம் வெளியாகி நேற்றுடன் முழுமையாக 5 வருடங்கள் நிறைவடைகிறது.
இந்த ஐந்து வருட நிறைவு நாளை ரசிகர்கள் ஒரு பக்கம் கொண்டாடி வரும் நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இதே நாளில் நயன்தாராவுடன் சேர்ந்து ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதாவது தனது தயாரிப்பில் நயன்தாரா அடுத்ததாக நடிக்க உள்ள ’நெற்றிக்கண்’ படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியாக உள்ளது என்பது தான் அந்த தகவல்.
இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: கடந்த 2015 ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதி ‘நானும் ரவுடிதான்’ வெளி வந்து இன்றுடன் 5 வருடங்கள் முடிவடைந்து இருக்கின்றது. அளவில்லா அன்பு மற்றும் பேதரவால் ’நானும் ரவுடிதான்’ பல இதயங்களை வென்றெடுத்து உள்ளது. எங்கள் வாழ்வை மாற்றியது.
ஐந்து வருடங்களுக்கு பிறகு தற்போது இதே நாளில் எங்கள் தயாரிப்பு நிறுவனமான ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ’நெற்றிக்கண்’ தயாராக உள்ளது.
எங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் உங்களின் அதே அளவிலான அன்பையும் ஆதரவையும் இந்த திரைப்படத்திற்கும் தருவீர்கள் என நம்புகிறோம் என தெரிவித்துள்ளார்.
ஆசீர்வாதம் அளித்த கடவுளுக்கும் பிரபஞ்சத்திற்கும் நன்றி. நெற்றிக்கண் பஸ்ட் லுக் போஸ்டர் நாளை முதல்’ என்று விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்
நானும் ரவுடி தான் படத்தின் போது தான் இவர்களது காதலும் மலர்ந்தது என்பதால், இந்த நாளை மிகவும் ஸ்பெஷல்லாக நயன், விக்கி ஜோடியும் கொண்டாடி வருகிறார்கள்.

Latest Videos

click me!