அரக்கர்களாக இருந்தவர்கள் ராஜ வம்சமாக மாறினர்.
சுரேஷ் அணியை சேர்ந்தவர்கள், ராஜ வம்சத்தை சேர்ந்தவர்களை முடிந்தவரை சத்தத்தாலும், சிரிப்பினாலும், வார்த்தையால் மட்டுமே தொந்தரவு செய்தார்கள்.
ஆனால் நேற்று விளையாடிய ரியோ அணியை சேர்ந்தவர்கள், அத்துமீறும் விதத்தில், ஆரஞ்சு தோல் கண்ணில் பீச்சி அடிப்பது, ஸ்ப்ரே அடிப்பது, ஒவ்வாமை ஏற்படுத்தும் வாசனையை அவர்கள் மூக்கின் அருகே காட்டுவது என தொந்தரவு செய்தனர்.
இது நேர்மையான முறையில் விளையாடியதாகவும் மக்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இந்நிலையில் நேற்று நிஷா, ரம்யா போன்ற சிலரிடம் குழந்தை போல் விளையாடினார். ஒரு தருணத்தில் நிஷாவை அடிக்கிறேன் என்பதற்கு பதிலாக சனத்தின் மீது அந்த அடி விழுந்தது.
இதற்க்கு ஓவர் எமோஷன் ஆகி, கொஞ்சம் இருந்தால் என் கண்ணு போய் இருக்கும் என, சுரேஷ் சக்ரவர்த்தியை வாடா போடா என அனைவர் மத்தியிலும் பேசி அசிங்கப்படுத்தினார்.
தன்னுடைய செயல் குழந்தை தனம் போல் இருந்தது என்பதை உணர்த்த சுரேஷ், பிக்பாஸ் அறைக்கு சென்று அழுததோடு, என்னை வீட்டை விட்டு அனுப்பிவிடுங்கள் என கூறினார்.
இது தெரியாமல் நடத்த செயல் என்பதையும் கூறினார். பின்னர் அவரை பிக்பாஸ் தேற்றி மீண்டும் வீட்டுக்குள் அனுப்பி வைத்தார்.
சுரேஷ் குழந்தை போல் ஆழுததன் மூலம் அவருடைய இன்னொரு முகம் தெரியவந்ததால் அவருக்கு மக்களின் ஆதரவும் கூடி கொண்டு தான் செல்கிறது.