சினிமாவில் பிசியாக இயங்கி வரும் விக்னேஷ் சிவன், தீவிரமான கிரிக்கெட் ரசிகர். குறிப்பாக இவர் எம்.எஸ்.தோனியின் (MS Dhoni) வெறித்தனமான ரசிகர். இவர் ஏற்கனவே தோனியை சந்தித்து புகைப்படம் எடுத்திருந்தாலும், அண்மையில் அவரை சந்தித்ததும், அவருடன் எடுத்த புகைப்படமும் ரொம்ப ஸ்பெஷலாம். ஏனெனில், தோனியிடம் ஒரு கதையை சொல்லி ஓகே வாங்கிவிட்டாராம் விக்கி. விரைவில் தனது இயக்கத்தில் தோனி நடிக்க உள்ளதையும் அவர் உறுதிப்படுத்தி உள்ளார்.