BB Ultimate : பிக்பாஸில் இருந்து விலகும் போது இப்படியா பண்ணுவீங்க... இருந்தாலும் கமல் ரொம்ப Strict தான் பா...!

Ganesh A   | Asianet News
Published : Feb 20, 2022, 01:56 PM IST

பிக்பாஸ் அல்டிமேட் (BiggBoss Ultimate) நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரத்துடன் விலக உள்ள கமல், இன்றைய எபிசோடில் செய்த செயல் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.

PREV
15
BB Ultimate : பிக்பாஸில் இருந்து விலகும் போது இப்படியா பண்ணுவீங்க... இருந்தாலும் கமல் ரொம்ப Strict தான் பா...!

உலகளவில் பிரபலமான ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் (BiggBoss) கடந்த 2017-ம் ஆண்டு தமிழில் அறிமுகமானது. விறுவிறுப்புக்கும், பரபரப்புக்கும் பஞ்சமில்லாத இந்நிகழ்ச்சி அந்த ஆண்டே ரசிகர்களின் பேவரைட் நிகழ்ச்சியாக மாறியது. இந்நிகழ்ச்சியின் கூடுதல் சிறப்பு என்றால் அது கமல்ஹாசன் தான். அவர் தொகுத்து வழங்கும் விதம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததால், கடைசியாக முடிந்த 5-வது சீசன் வரை அவரே தொகுத்து வழங்கினார். 

25

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில், ஆரவ்வும், இரண்டாவது சீசனில் ரித்விகாவும், மூன்றாவது சீசனில் முகினும், நான்காவது சீசனில் ஆரியும், ஐந்தாவது சீசனில் ராஜுவும் டைட்டில் வின்னர்களாகினர். சமீப காலமாக ஓடிடி தளங்கள் மக்களிடையே மிகவும் பிரபலமாகி வருகின்றன. இதனால் தமிழில் ஓடிடி-க்கென பிரத்யேகமாக பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
 

35

பிக்பாஸ் அல்டிமேட் (BiggBoss Ultimate) என பெயரிடப்பட்டு உள்ள, இந்நிகழ்ச்சி 24 மணிநேரமும் நேரடியாக ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிப்படி ஒவ்வொரு வார இறுதியிலும் மக்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் குறைவான ஓட்டுகளை பெற்ற போட்டியாளர் வெளியேற்றப்படுவார்.

45

அந்த வகையில் கடந்த இரண்டு வாரங்களில் சுரேஷ் சக்ரவர்த்தி, சுஜா வருணி ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். 3-வது வாரத்தின் இறுதி நாளான இன்று இரண்டு பேர் எலிமினேட் செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டது. வழக்கமாக் சீசன் இறுதியில் தான் டபுள் எவிக்‌ஷன் நடக்கும், ஆனால் இந்த முறை ஆரம்பத்திலேயே அந்த முறையில் இருவரை வெளியேற்றி உள்ளது உறுதியாகி உள்ளது.

55

அதன்படி இந்த வாரம் ஷாரிக் (Shariq) மற்றும் அபிநய் (Abhinay) ஆகியோர் வெளியேற்றப்பட்டு உள்ளார்களாம். பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசன் இந்த வார எபிசோடுடன் விலக உள்ளதாக கூறப்படுகிறது. விலகும் நேரத்திலும் இரண்டு பேரை எவிக்ட் செய்துவிட்டு போவதை அறிந்த ரசிகர்கள், இருந்தாலும் கமல் ரொம்ப Stict தான் பா என ட்ரோல் செய்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... BB Ultimate : இனி இது ஒத்துவராது.... பிக்பாஸ் அல்டிமேட்டில் இருந்து திடீரென விலகிய கமல்? - காரணம் இதுதானாம்..!

click me!

Recommended Stories