இந்நிலையில், போனி கபூர் அடுத்ததாக தயாரிக்க உள்ள தமிழ் படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அவர் அடுத்ததாக ரஜினியுடன் (Rajini) கூட்டணி அமைக்க உள்ளாராம். இப்படத்தை கனா பட இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. போனி கபூர் தயாரிப்பில் தற்போது உருவாகி இருக்கும் நெஞ்சுக்கு நீதி படத்தை அருண்ராஜா காமராஜ் தான் இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.