மலையாள திரையுலகில் முன்னணி குணச்சித்திர நடிகையாக இருப்பவர் அஞ்சலி நாயர் (Anjali Nair). தமிழில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான நெல்லு படம் மூலம் நடிகையாக அறிமுகமான இவர், இதையடுத்து கோட்டி, உன்னையே காதலிப்பேன் போன்ற படங்களில் நடித்தார். இந்த படங்கள் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்காததால், மலையாள திரையுலகுக்கு சென்றார்.