இயக்குனர் விக்னேஷ் சிவனும் - லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் காதலில் விழ காரணமாக இருந்த திரைப்படம் “நானும் ரவுடி தான்”. அதன் நினைவாக அந்த ஜோடி தங்களது தயாரிப்பு நிறுவனத்திற்கு ரவுடி பிக்சர்ஸ் என பெயர் வைத்துள்ளார். இந்நிறுவனம் மூலம் நெற்றிக்கண், கூழாங்கல், ஊர்க்குருவி, வாக்கிங் டாக்கிங் ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம் என தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தயாரித்து வருகின்றனர்.