ஷங்கர் மகளுக்கு திருமணம்
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கருக்கு ஐஸ்வர்யா, அதிதி என இரண்டு மகள்களும், அர்ஜித் என்கிற மகனும் உள்ளார். இதில் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. கொரோனா அச்சுறுத்தல் இருந்ததன் காரணமாக நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்துகொண்டனர். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.
சினிமாவில் அறிமுகமாகும் அதிதி ஷங்கர்
ஷங்கரின் 2-வது மகள் அதிதி, தற்போது சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடிப்பில் தற்போது விருமன் படம் தயாராகி உள்ளது. முத்தையா இயக்கி உள்ள இப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்துள்ளார் அதிதி. இப்படத்தை நடிகர் சூர்யாவும், நடிகை ஜோதிகாவும் இணைந்து தங்களது 2டி நிறுவனம் மூலம் தயாரித்துள்ளனர். இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது.
மே மாதம் அதிதிக்கு திருமணமா?
இதனிடையே இயக்குனர் ஷங்கர் வீட்டில் திருமண ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும், நடிகை அதிதிக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகவும் நேற்றிலிருந்து சமூக வலைதளங்களில் தகவல் தீயாய் பரவி வருகிறது. இதுகுறித்து கோலிவுட் வட்டாரத்தில் விசாரித்தபோது ஷங்கர் வீட்டில் விரைவில் ஒரு விசேஷம் நடக்கப்போவது உண்மை தான், ஆனால் அது நடிகை அதிதியின் திருமணம் இல்லை என்பது தெரியவந்துள்ளது.
பின்னணி என்ன?
இயக்குனர் ஷங்கர் தனது மூத்த மகள் ஐஸ்வர்யாவின் திருமணத்தை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக எளிமையாக நடத்தினார். தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் பிரம்மாண்டமாக வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த உள்ளாராம். வருகிற மே மாதம் நடைபெற உள்ள இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு திரைப்பிரபலங்களை அழைக்கும் பணியில் தீவிரமாக இறங்கி உள்ளார் ஷங்கர். மற்றபடி அதிதிக்கு திருமணம் என பரவும் தகவல் முற்றிலும் வதந்தி என தெரியவந்துள்ளது.
இதையும் படியுங்கள்... viruman Movie : சர்ச்சையில் சிக்கிய விருமன்... ஷங்கர் மகள் நடித்த முதல் படம் ரிலீசாவதில் சிக்கல்