அஜித்தின் 60-வது படமான வலிமை கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் பூஜையுடன் தொடங்கப்பட்டது. பின்னர் பலகட்ட போராட்டங்களுக்கு பிறகு ஒருவழியாக இரண்டு ஆண்டுகளுக்கு பின் திரையரங்குகளில் வெளியானது.
28
valimai
தமிழ், தெலுங்கி, இந்தி, கன்னடம் ஆகிய 4 மொழிகளில் கடந்த மாதம் 24-ந் தேதி பிரம்மாண்டமாக வெளியிடப்பட்ட இப்படம் வெளியான 3 நாட்களிலேயே ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.
38
valimai
வலிமை படம் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக தயாரிப்பாளர் தனது ட்வீட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார். அதோடு விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். இப்படம் இந்த படம் ஓடிடி-யில் ரிலீஸானது.
போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, ஜிப்ரான் பின்னணி இசையமைத்துள்ளார். இப்படத்தில் நடிகர் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்
58
valimai
முன்னதாக வெளியான பாடல்களும், டிரைலரும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் படம் வெளியான பிறகு கலவையான விமர்சனங்களை மட்டுமே பெற்றிருந்தது.
68
valimai
மூன்று நாட்களில் 100 கோடியை வசூல் செய்திருந்தாலும் அடுத்தடுத்து வெளியான பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்கள் போலியானவை புகார் எழுந்து வந்தன. அதுமட்டுமின்றி நகரங்களை தவிர்த்து பெரும்பாலான திரையரங்க உரிமையாளர்கள் 20 சதவீதம் அளவுக்கு நஷ்டம் என்றும் சொல்லப்பட்டது.
78
valimai
இந்நிலையில், தயாரிப்பாளர் கே.ராஜனிடம் வலிமை வசூல் பற்றி கேட்கப்பட்டது. அப்போது பேசிய அவர் சென்னை, செங்கல்பட்டில் வலிமையை வாங்கியவர்களுக்கு 10 சதவீதம் நஷ்டம், செங்கல்பட்டு தாண்டி மற்ற ஏரியா எல்லாம் 20 சதவீதம் நஷ்டம் என அவர் கூறியுள்ளார்.