நடிகை நயன்தாரா தனது காதல் கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஸ்பெயின் நாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு 10 நாட்களுக்கு மேலாக இருவரும் ஜாலியாக ஊர் சுற்றி வருகின்றனர். அங்கு எடுத்த புகைப்படங்களையும், வீடியோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினந்தோறும் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார் விக்னேஷ் சிவன்.