வீட்ல சும்மா தான் இருக்கேன்... மீண்டும் காமெடியனாக நடிக்க தயார் - கேப்டன் பட விழாவில் ஓப்பனாக பேசிய சந்தானம்

Published : Aug 26, 2022, 09:33 AM IST

Santhanam : நடிகர் சந்தானம் மீண்டும் காமெடி வேடங்களில் நடிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அவரே அதனை உறுதிப்படுத்தி உள்ளார். 

PREV
14
வீட்ல சும்மா தான் இருக்கேன்... மீண்டும் காமெடியனாக நடிக்க தயார் - கேப்டன் பட விழாவில் ஓப்பனாக பேசிய சந்தானம்

விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பேமஸ் ஆனவர் சந்தானம். இவரின் திறமையை கண்டறிந்து சினிமாவில் அறிமுகப்படுத்தியது சிம்பு தான். அவர் நடித்த காதல் அழிவதில்லை, அலை, மன்மதன், வல்லவன் போன்ற படங்களில் அடுத்தடுத்து வாய்ப்பு கொடுத்து சந்தானத்தை மக்கள் மத்தியில் பிரபலமாக்கினார் சிம்பு.

24

இதையடுத்து சினிமாவில் காமெடியனாக அசுர வளர்ச்சி கண்ட சந்தானம், அடுத்தடுத்து விஜய், அஜித், ரஜினி, சூர்யா போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து அசத்தினார். சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவின் முன்னணி காமெடியனாக வலம் வந்த சந்தானம், அவ்வப்போது அறை எண் 305-ல் கடவுள், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், கண்ணா லட்டு தின்ன ஆசையா போன்ற படங்களில் ஹீரோவாகவும் நடித்து வந்தார்.

இதையும் படியுங்கள்... கே.ஜி.எஃப் பாணியில் ரிலீசாகும் சிம்புவின் வெந்து தணிந்தது காடு... கவுதம் மேனன் வெளியிட்ட சர்ப்ரைஸ் அப்டேட்

34

கடந்த 2017-ம் ஆண்டுக்கு பின்னர் முழு நேர ஹீரோவாகி விட்டார் சந்தானம். இவர் நாயகனாக நடித்த தில்லுக்கு துட்டு, ஏ1, இனிமே இப்படித்தான் போன்ற படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றாலும், கடந்த சில ஆண்டுகளாக இவர் நடிப்பில் வெளியான பிஸ்கோத், டகால்டி, சபாபதி, குலுகுலு ஆகிய திரைப்படங்கள் படு தோல்வியை சந்தித்தன.

44

இதனால் நடிகர் சந்தானம் மீண்டும் காமெடி வேடங்களில் நடிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டு வந்தது. தற்போது அதனை அவரே உறுதிப்படுத்தி உள்ளார். நேற்று சென்னையில் நடந்த கேப்டன் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்டில் கலந்துகொண்ட சந்தானம், ஆர்யா பாஸ் என்கிற பாஸ்கரன் 2 படம் நடித்தால் அதில் காமெடியனாக நடிக்க தயார் என கூறினார். முன்னதாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வருமாறு அழைப்பு விடுக்க சந்தானத்திற்கு போன் போட்ட ஆர்யா என்ன செய்யுற என கேட்டுள்ளார், இதற்கு வீட்ல சும்மா தான் இருக்கேன் என கூறி உள்ளார் சந்தானம். சரி இங்கயும் வந்து சும்மா இரு அப்டினு சொல்லி தான் தன்னை ஆர்யா அழைத்ததாகவும் நகைச்சுவையாக கூறினார் சந்தானம்.

இதையும் படியுங்கள்... தங்கை நதியாவின் திருமண புகைப்படங்களை பகிர்த ஆண்ட்ரியா..! கல்யாணத்தில் கூட கவர்ச்சி உடையில் கலக்குறாங்களே!

Read more Photos on
click me!

Recommended Stories