காதலன் விக்னேஷ் சிவனுடன்... அவசர அவசரமாக தனி விமானத்தில் கொச்சிக்கு பறந்த நயன்தாரா! இது தான் காரணம்!

First Published | Apr 10, 2021, 7:30 PM IST

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும், தனி விமானத்தில் கொச்சிக்கு செல்வதற்கு விமான நிலையத்திற்கு வருகை தந்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
 

கோலிவுட்டில் தற்போது பரபரப்பு கிளப்பி வரும் காதல் ஜோடி நயன்தாரா - விக்னேஷ் சிவன். நானும் ரவுடி தான் படத்தின் மூலம் பற்றிய காதல் தீ இன்று வரை கொளுந்துவிட்டு எரிகிறது.
படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் தான் நயன்தாரா - விக்னேஷ் சிவனுடன் டேட்டிங் சென்று விடுகிறார் என்றால், தற்போது படு பிசியாக நடித்து வரும் நிலையிலும் காதலன் விக்னேஷ் சிவனுடன் கொச்சிக்கு பறந்துள்ளார்.
Tap to resize

கொச்சிக்கு செல்வதற்காக இந்த இணை பிரியாத காதல் ஜோடிகள் இருவரும், விமான நிலையத்திற்கு வந்த போது, எடுக்கப்பட்ட புகைப்படங்கள் படு வைரலாகி வருகிறது.
அதாவது கேரள மக்களால், மிகவும் பிரமாண்டமாக கொண்டாடப்படும் விஷு இன்னும் ஒரு சில நாட்களில் கொண்டாட பட உள்ளதால், தன்னுடைய தாயகத்திற்கு, காதலனுடன் விசிட் அடித்துள்ளார் நயன்தாரா.
தற்போது கொரோனா தன்னுடைய இரண்டாவது அலையை துவங்கி விட்டதால், வழக்கங்கள் போல் தனி விமானம் மூலம், கொச்சிக்கு நயன்தாரா பறந்துள்ளார்.
விமானத்தின் முன் நின்று இவர் எடுத்து கொண்ட புகைப்படமும் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. விஷு -வை கொண்டாடிவிட்டு வந்த பிறகு, ஹைதராபாத்தில் நடைபெறும் 'அண்ணாத்த' படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Videos

click me!