காமெடி நடிகை வித்யுலேகா ராமன்... கிராண்ட் மெஹந்தி ஃபங்க்ஷன்!! கலர் ஃபுல் போட்டோஸ்!!

First Published Sep 13, 2021, 12:56 PM IST

காமெடி நடிகை வித்யுலேகா ராமனுக்கு, மெஹந்தி நிகழ்ச்சி நடைபெற்றபோது, எடுத்த புகைப்படங்களை, அவரது சகோதரி கீதாஞ்சலி தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 
 

கவுதம் மேனன் இயக்கத்தில் நீதானே என் பொன் வசந்தம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் வித்யுலேகா ராமன். இந்த படத்தில் சமந்தாவிற்கு தோழியாக நடித்தார். இந்த படத்தின் தெலுங்கு வெர்ஷனிலும் இவர் தான் சமந்தாவின் தோழியாக நடித்தார்.

அடுத்தடுத்து வீரம், ஜில்லா, ப.பாண்டி, தீயா வேலை செய்யனும் குமாரு, வேதாளம் உள்ளிட்ட படங்களில் நடித்த வித்யுலேகா ராமன். சந்தானம், சூரி என பலருடன் சேர்ந்து காமெடியில் கலக்கியுள்ளார்.

பப்ளியான லுக்கில் தனது காமெடியால் பலரையும் வெகுவாக ஈர்த்தது. இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான பஞ்சு மிட்டாய் என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் தமிழில் நடிக்கவில்லை, ஆனால் தெலுங்கில் பிசியாக நடித்து வருகிறார். 

இந்நிலையில் வித்யுலேகா ராமன், கடந்த வருடம் ஃபிட்னெஸ் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர் சஞ்சய் என்பவரை காதலித்து வருவதாகவும், அவருடன் நடந்த நிச்சயதார்த்த புகைப்படங்களையும் பகிர்ந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். 

இவரது திருமணம் சமீபத்தில் நடந்த நிலையில், தன்னுடைய பேச்சிலர் பார்ட்டியை எப்போதோ துவங்கி விட்டார் வித்யு ராமன். அவ்வப்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்திலும் வைரலானது.
 

இந்நிலையில் இவரது கலர் ஃபுல் மெஹந்தி செலபிரேஷன் புகைப்படத்தை, கீதாஞ்சலி செல்வராகவன் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். 
 

இந்த நிகழ்ச்சியில் இவர்களது நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். எளிமையாக மெஹந்தி நிகழ்ச்சி நடந்தாலும், சந்தோஷங்களுக்கும் ஆட்டம் - பாட்டத்திற்கும் குறைவில்லாமல் நடந்துள்ளது.
 

காமெடி நடிகை வித்யுலேகா ராமனுக்கு, மெஹந்தி நிகழ்ச்சி நடைபெற்றபோது, எடுத்த புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

click me!