மெல்ல மெல்ல மீண்டு வரும் யாஷிகா... பரிதாபத்தின் உச்சத்தில் வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்..!!

First Published | Sep 12, 2021, 8:06 PM IST

யாஷிகா விபத்தில் சிக்கி காயமடைந்த பின்னர் மெல்ல மெல்ல அதில் இருந்து மீண்டு வரும் நிலையில், இவரது லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகி இவரது ரசிகர்களை வருத்தமடைய செய்துள்ளது.
 

கடந்த ஜூலை 25ம் தேதி அதிகாலை ஒரு மணி அளவில் நண்பர்களுடன் பார்ட்டி ஒன்றிற்கு சென்றுவிட்டு புதுச்சேரியில் இருந்து சென்னை திரும்பிய, யாஷிகா ஆனந்த் டாடா ஹேரியர் காரை படுவேகமாக ஓட்டியுள்ளார். அப்போது கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சூளேறிக்காடு என்ற பகுதி அருகே கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதிய கார் விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் யாஷிகா ஆனந்தின் தோழியான ஐதராபாத்தைச் சேர்ந்த பெண் இன்ஜினியர் வள்ளி செட்டி பவணி விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின் இருக்கையில் இருந்ததால் யாஷிகாவின் நண்பர்கள் அமீர், சையது ஆகியோர் சிறு காயங்களுடன் தப்பியதாக தெரிகிறது. 

Tap to resize

விபத்தில் உடல் முழுவதும் படுகாயம் அடைந்த யாஷிகா ஆனந்த் சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், பின்னர் பெற்றோருடன் வீட்டுக்கு அனுப்பப்பட்டார். 

யாஷிகா மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு சற்றே உடல் நலம் தேறிய யாஷிகா ஆனந்த் தன்னுடைய தோழியான வள்ளி செட்டி பவணி மறைவு குறித்து உருக்கமாக பதிவிட்டிருந்தார். அதேபோல் விபத்தின் போது தான் குடிக்கவில்லை என்றும், தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டும் என்றும் பதிவிட்டிருந்தார். 

இவர் எழுந்து நடப்பதற்கே 5 மாதங்கள் ஆகும் என்பதால், இயற்க்கை உபாதைகள் முதல் அனைத்தும் பெட்டில் தான் என, இவர் முன்பு போட்ட பதிவு படிப்பவர்கள் நெஞ்சங்களையே உருக வைத்தது.

தற்போது இந்த விபத்தின் தாக்கத்தில் இருந்தும், விபத்தில் ஏற்பட்ட காயங்களில் இருந்தும் மெல்ல மெல்ல மீண்டு வரும் யாஷிகா புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவரது தாயார் யாஷிகாவுக்கு உணவு கொடுக்கிறார். பக்கத்தில் யாஷிகா அவரது செல்ல நாய் குட்டி ஒன்றையும் வைத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
 

அதே நேரத்தில் விதவிதமாக புகைப்படங்களை வெளிட்டு பட்டம் பூச்சிபோல் சிறகடித்து வந்த இவருக்கா? இப்படி ஒரு நிலை என சில ரசிகர்கள் உருக்கமாக தெரிவித்து, விரைந்து குணமாகும்படி தங்களுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.
 

Latest Videos

click me!