வெள்ளை நிற உடையில்... கியூட் ஏஞ்செல் போல் போஸ் கொடுக்கும் பிக்பாஸ் லாஸ்லியா! வேற லெவல் அழகு போங்க!!

First Published | Sep 12, 2021, 7:37 PM IST

பிக்பாஸ் லாஸ்லியா அடுத்தடுத்து திரைப்படங்களில் கவனம் செலுத்த உள்ள நிலையில், முன்பை விட தினுசு தினுசா போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் வெள்ளை நிற உடையில் ஏஞ்செல் போல் ஜொலிக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களின் தொகுப்பு இதோ...

இலங்கை செய்திவாசிப்பாளரான லாஸ்லியா பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றதால் தமிழகம் முழுவதும் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார்.

அந்நிகழ்ச்சியில் கவினுக்கும், லாஸ்லியாவிற்கும் இடையே மலர்ந்த காதல், வெளியே வந்த பிறகு பெரிதாக நீடிக்கவில்லை. இருவரும் அடுத்தடுத்து கோலிவுட்டில் படங்களில் நடித்து வருகின்றனர். 

Tap to resize

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு லாஸ்லியாவிற்கு ஹர்பஜன் சிங்குடன் “ப்ரெண்ட் ஷிப்”, பிக்பாஸ் ஆரியுடன் ஒரு படம், புதுமுக ஹீரோ ஒருவருடன் ஒரு படம், தர்ஷன் உடன் ஒரு படம் என அடுத்து வாய்ப்புகள் குவிந்து வருகிறது. 

அதிக படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வரும் லாஸ்லியா மெல்ல மெல்ல படவாய்ப்புகளை, பிடிக்க கவர்ச்சி ரூட்டுக்கு காய் நகர்த்தி வருகிறார்.

தற்போது இவர் வெள்ளை நிற உடையில் விதவிதமாக வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.

பார்ப்பதற்கு, வெள்ளை நிற உடை அணிந்த தேவதை போலவே இவர் இருப்பதாக, நெட்டிசன்களும் ரசிகர்களும் கூறி வருகிறார்கள்.

Latest Videos

click me!