Published : May 23, 2025, 02:03 PM ISTUpdated : May 23, 2025, 02:58 PM IST
2025-ம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு பல வெற்றிப் படங்கள் கிடைத்தாலும் தோல்விப் படங்களும் அதிகளவில் வந்துள்ளன. அதில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்த படம் பற்றி தான் தற்போது பார்க்க உள்ளோம்.
தமிழ் சினிமாவுக்கு 2024-ம் ஆண்டைக் காட்டிலும் 2025-ம் ஆண்டின் முதல் பாதி பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளது. கடந்த ஆண்டு முதல் ஆறு மாதங்களுக்கு ஒரு ஹிட் படம் கூட இல்லாமல் துவண்டு கிடந்தது தமிழ் சினிமா. ஆனால் 2025-ம் ஆண்டு பொறுத்தவரை மாதம் குறைந்தது ஒரு வெற்றிப் படமாவது வந்துவிடுகிறது. ஜனவரி மாதம் மதகஜராஜா, குடும்பஸ்தன் படங்கள் ஹிட்டாகின. பிப்ரவரியில் டிராகன் படமும், மார்ச் மாதம் வீர தீர சூரன் படமும் வெற்றியடைந்தன. ஏப்ரலில் அஜித்தின் குட் பேட் அக்லி மற்றும் கேங்கர்ஸ் படங்கள் வசூல் வேட்டை ஆடின. அதேபோல் மே மாதமும் ரெட்ரோ, டூரிஸ்ட் பேமிலி என இரண்டு வெற்றிப்படங்கள் தமிழ் சினிமாவுக்கு கிடைத்துள்ளன.
24
2025-ம் ஆண்டின் தோல்விப்படம் எது?
2025-ம் ஆண்டில் தோல்விப் படங்களும் அதிகம் வந்துள்ளன. அதில் மிகப்பெரிய தோல்வியை தழுவிய படம் ஒன்று உள்ளது. அப்படத்தால் தயாரிப்பாளருக்கு சுமார் 127 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக வலைப்பேச்சு பிஸ்மி கூறி இருக்கிறார். அந்தப் படம் வேறெதுவுமில்லை, நடிகர் அஜித்குமார் நடித்து கடந்த பிப்ரவரி மாதம் திரைக்கு வந்த விடாமுயற்சி தான். மகிழ் திருமேனி இயக்கிய இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து இருந்தது. இதில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார். மேலும் ரெஜினா, அர்ஜுன், ஆரவ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தது.
34
விடாமுயற்சி பட நடிகர்களின் சம்பளம் எவ்வளவு?
விடாமுயற்சி திரைப்படம் சுமார் 297.5 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு இருந்தது. இதில் அதிகபட்சமாக நடிகர் அஜித்துக்கு ரூ.105 கோடி சம்பளம் வழங்கப்பட்டு இருந்தது. அதேபோல் திரிஷாவுக்கு 5 கோடி, அர்ஜுனுக்கு 7 கோடி, மகிழ் திருமேனிக்கு 5 கோடி, அனிருத்துக்கு 13 கோடி, ஒளிப்பதிவாளருக்கு 3 கோடி, மற்ற நடிகர்களின் சம்பளம் 2.5 கோடி என சம்பளத்துக்கு மட்டுமே 141 கோடி செலவிடப்பட்டு உள்ளது. இப்படத்தின் தயாரிப்பு செலவு 60 கோடியாம், இப்படத்திற்காக வாங்கிய கடனின் வட்டித் தொகை 70 கோடியாம். இதுதவிர பப்ளிசிட்டிக்கு 5 கோடி செலவிட்டிருக்கிறார்கள். அதுமட்டுமின்றி பிரேக்டவுன் ரீமேக் உரிமைக்காக பாராமவுண்ட் நிறுவனத்துக்கு 17.5 கோடி கொடுத்திருக்கிறார்கள்.
விடாமுயற்சி படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் 70 கோடிக்கும், சாட்டிலைட் உரிமையை சன் டிவி 30 கோடிக்கும் வாங்கி இருந்தது. அதேபோல் ஆடியோ உரிமை 15 கோடி, இதுதவிர திரையரங்க உரிமை என மொத்தம் 156 கோடி பிசினஸ் நடந்துள்ளது. ஆனால் அப்படம் உலகளவில் 137 கோடி வசூலித்ததில் லைகாவுக்கு 14 கோடி வரை ஷேர் கிடைத்திருக்கிறது. இதனை கூட்டிக் கழித்து பார்த்தால் விடாமுயற்சி படம் மூலம் லைகாவுக்கு 170 கோடி வருவாய் கிடைத்திருக்கிறது. அதனை பட்ஜெட்டோடு ஒப்பிட்டு பார்த்தால் 127 கோடி இழப்பை சந்தித்து இருக்கிறார்கள். இந்த ஆண்டின் அதிக நஷ்டத்தை ஏற்படுத்திய படமாக விடாமுயற்சி உள்ளது.