Ajith
தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் நடிகர்களுள் அஜித்தும் ஒருவர். இவர் சினிமாவில் நடிப்பதை தவிர்த்து பட விழாக்கள், ஆடியோ லாஞ்ச், விருது விழாக்கள் என எதிலும் கலந்துகொள்ளாவிட்டாலும், இவருக்கான ரசிகர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. முன்பெல்லாம் அஜித்தின் புகைப்படங்கள் எப்போவாது வெளியாகும், ஆனால் சமீப காலமாக அவரின் புகைப்படங்கள் வெளியாகாத நாளே இல்லை என சொல்லும் அளவுக்கு தினசரி வெளிவந்த வண்ணம் உள்ளது.
Ajith
மேலும் அந்த புகைப்படங்களில் நடிகர் அஜித் ஸ்லிம்மாகவும் காட்சியளிக்கிறார். இதன்மூலம் அவர் விடாமுயற்சி படத்திற்காக வெளிநாட்டில் இருந்தபடியே வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்து உடல் எடையை குறைத்து வருவது தெரிகிறது. நடிகர் அஜித் அடுத்ததாக விடாமுயற்சி படத்தில் தான் நடிக்க உள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை மகிழ் திருமேனி இயக்க உள்ளார். அடுத்த மாத இறுதியில் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ளது.
விடாமுயற்சி படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா தான் நடிக்க உள்ளாராம். விடாமுயற்சி படத்தில் நடித்து முடித்த பின்னர் தன்னுடைய உலக பைக் சுற்றுலாவின் இரண்டாம் கட்டத்தை தொடங்க உள்ளார் அஜித். வருகிற நவம்பர் மாதத்தில் இருந்து அவர் உலக சுற்றுலாவிற்கு சென்றுவிடுவார் என கூறப்படுகிறது. இதனால் அதற்குள் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட இயக்குனர் மகிழ் திருமேனி திட்டமிட்டு உள்ளாராம்.
இதையும் படியுங்கள்... இனி நான் அமெரிக்கா Anchor.. ரசிகர்களுக்கு டாடா சொல்லிவிட்டு புறப்பட்ட மணிமேகலை!