Asin
தமிழ் திரையுலகில் அறிமுகமான சில ஆண்டுகளிலேயே முன்னணி நடிகை என்கிற அந்தஸ்த்தை பெற்றவர் தான் அசின். தமிழில் இவர் நடித்த படங்கள் அனைத்தும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகின. இதனால் ராசியான நடிகையாகவும் வலம் வந்தார் அசின். இவருக்கு கடந்த 2016-ம் ஆண்டு ராகுல் சர்மா என்பவருடன் திருமணம் நடந்தது. இந்த ஜோடிக்கு அடுத்த ஆண்டே அரின் என்கிற அழகான பெண் குழந்தையும் பிறந்தது. திருமணத்துக்கு பின்னர் சினிமாவில் இருந்து விலகிவிட்டார் அசின்.
Asin
அசினின் கணவர் ராகுல் சர்மாவுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும், இதை அறிந்த அசின், அவரை பலமுறை எச்சரித்தும் அவர் அந்த பெண் உடனான உறவை துண்டிக்க மறுத்ததால் மனமுடைந்த அசின், ராகுல் சர்மாவை விவாகரத்து செய்யும் முடிவுக்கு வந்துவிட்டதாக கூறப்படுகிறது. தற்போது நடிகை அசின் அவரது கணவரை பிரிந்து தனது மகள் அரின் உடன் பெற்றோர் வீட்டில் வசித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Asin
அசின் - ராகுல் சர்மா ஜோடியின் விவாகரத்து மேட்டரை உறுதி படுத்தும் விதமாக ஒரு சம்பவம் நடந்துள்ளது. அது என்னவென்றால் நடிகை அசின், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கி இருக்கிறார். இதற்கு முன்னர் விவாகரத்து செய்த பல நடிகைகள் இதுபோன்று செய்ததை பார்த்திருக்கிறோம். அதே பாணியில் அசினும் செய்துள்ளதால் அவரின் விவாகரத்து கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாகவே தெரிகிறது.
இதையும் படியுங்கள்... விக்னேஷ் சிவனை போல் மகிழ் திருமேனியையும் கழட்டிவிடப் போகிறாரா அஜித்? விடாமுயற்சி தாமதம் ஆவது ஏன்?