சவுக்கு சங்கர் கதையை படமாக எடுக்க பிளான் போடும் வெற்றிமாறன்...?

First Published | Sep 17, 2022, 7:11 AM IST

விடுதலை, வாடிவாசல், வட சென்னை 2 என வரிசையாக படங்களை கைவசம் வைத்து பிசியான இயக்குனராக வலம் வரும் வெற்றிமாறன், அடுத்ததாக சவுக்கு சங்கர் கதையை படமாக்க ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

தமிழ் திரையுலகில் சக்சஸ்புல் டைரக்டராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவர் இயக்கத்தில் இதுவரை வெளியான படிக்காதவன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் ஆகிய அனைத்து படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இவர் இயக்கத்தில் தற்போது விடுதலை என்கிற திரைப்படம் தயாராகி வருகிறது. எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படத்தின் திரைக்கதை அமைத்துள்ளார் வெற்றிமாறன்.

விடுதலை படத்தில் நகைச்சுவை நடிகர் சூரி கதைநாயகனாக நடித்துள்ளார். இதுதவிர விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, கவுதம் மேனன், ராஜீவ் மேனன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து வருகிறது. இளையராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். இரண்டு பாகங்களாக இப்படத்தை ரிலீஸ் செய்ய உள்ளனர்.

இதையும் படியுங்கள்.... பர்ஸ்ட் ‘சுறா’ படம் பண்றதா இருந்தது... நான் தான் ரிஜெக்ட் பண்ணிட்டு VTV பண்ணேன் - சிம்பு சொன்ன ஷாக்கிங் தகவல்

Tap to resize

இதுதவிர சூர்யா நடிக்க உள்ள வாடிவாசல் படத்தையும் கைவசம் வைத்துள்ளார் வெற்றிமாறன். சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் என்கிற நாவலை மையமாக வைத்து இப்படத்தை எடுக்க உள்ளார் வெற்றி. கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க உள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்க உள்ளார். விடுதலை படம் முடிந்த பின்னர் இப்படத்தின் பணிகளை தொடங்க உள்ளார் வெற்றிமாறன்.

இதுதவிர வடசென்னை 2 மற்றும் வெப் தொடர் ஒன்றையும் கைவசம் வைத்துள்ளார். இவ்வாறு பிசியான இயக்குனராக வலம் வரும் அவர், தற்போது மேலும் ஒரு கதையை இயக்க ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. அதன்படி தமிழகத்தில் பரபரப்புக்கு பஞ்சமில்லாத அரசியல் விமர்சகரான சவுக்கு சங்கரின் வாழ்க்கைக் கதையை படமாக்க வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளதாகவும், இதற்கான பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. பிரபல சினிமா பத்திரிகையாளர் சொல்லியுள்ள இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பது வரும் நாட்களில் தெரியவரும்.

இதையும் படியுங்கள்.... மூன்று நாள் தேடல்... நான் என்ன கொலைகாரனா? கொள்ளைக்காரனா... ரசிகர்களிடம் கேள்வி எழுப்பிய அஜித்..! வைரல் வீடியோ!

Latest Videos

click me!