Sowcar Janaki: ஐசியூவில் அனுமதிக்கப்பட்ட நடிகை சௌகார் ஜானகி... உடல்நிலை எப்படி இருக்கு?

Published : Aug 20, 2026, 09:21 AM IST

Sowcar Janaki Hospitalized : பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல்நிலை மோசமடைந்ததால், அவர் ஐசியூக்கு மாற்றப்பட்டார்.

PREV
14
ஐசியூவில் சௌகார் ஜானகி

தமிழ் சினிமாவின் மூத்த நடிகைகளில் ஒருவரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான சௌகார் ஜானகி உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 95 வயதாகும் அவர், சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கடந்த ஒரு வாரமாக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், புதன்கிழமை இரவு உடல்நிலையில் ஏற்பட்ட மாற்றத்தைத் தொடர்ந்து ஐசியூவுக்கு மாற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சௌகார் ஜானகி சில காலமாக சுவாசம் தொடர்பான பிரச்சனைகளை எதிர்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனை வட்டாரத் தகவலின்படி, அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தள்ளாத வயதிலும் தளராத நடிப்பு..பத்ம விருது பெறும் சௌகார் ஜானகி குறித்த சுவாரஸ்ய தகவல்..

24
‘சௌகார்’ படத்தில் அறிமுகமானவர்

1931-ம் ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி பிறந்த சௌகார் ஜானகி, தனது கலைப் பயணத்தை நாடக மேடையில் தொடங்கினார். திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பே 300-க்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்த அனுபவம் அவருக்கு இருந்தது.

1950-ம் ஆண்டு வெளியான ‘சௌகார்’ திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கதாநாயகியாக அறிமுகமானார். என்.டி. ராமராவ் கதாநாயகனாக நடித்த இந்தப் படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ‘சௌகார்’ என்ற பெயரும் அவரது பெயருடன் நிரந்தரமாக இணைந்தது. அதன் பின்னர் ரசிகர்கள் அவரை ‘சௌகார் ஜானகி’ என்றே அழைக்கத் தொடங்கினர்.

34
400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்

தெலுங்கில் அறிமுகமானாலும், தமிழ் மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல்வேறு தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் சௌகார் ஜானகி தொடர்ந்து நடித்தார். தனது நீண்ட திரைப்பயணத்தில் 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர், தென்னிந்திய சினிமாவின் குறிப்பிடத்தக்க மூத்த கலைஞர்களில் ஒருவராகத் திகழ்கிறார். நாடகம் மற்றும் சினிமா என பல தளங்களில் தனது திறமையை வெளிப்படுத்திய சௌகார் ஜானகியின் கலைச் சேவையைப் பாராட்டி, இந்திய அரசு 2022-ம் ஆண்டு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது.

44
உடல்நிலை எப்படி உள்ளது?

வயது மூப்பு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக திரைப்படங்களில் அவரது நடிப்பு குறைந்திருந்தது. இந்நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. சௌகார் ஜானகி விரைவில் முழுமையாக குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என ரசிகர்கள், குடும்பத்தினர் மற்றும் திரையுலகைச் சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களுக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories