Suriya 46 : மீண்டும் சஞ்சய் ராமசாமியா? சூர்யா 46 பட கதையில் வெங்கி அட்லூரி வைத்த ட்விஸ்ட்

Published : Jun 30, 2025, 02:51 PM IST

வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாக உள்ள சூர்யா 46 திரைப்படத்தின் கதைக்களம் குறித்த தகவலை இயக்குனர் பேட்டி ஒன்றில் வெளியிட்டு உள்ளார்.

PREV
14
Suriya 46 Movie Story

லக்கி பாஸ்கர் படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் வெங்கி அட்லூரி. அவரது இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் சூர்யா நாயகனாக நடிக்க, மலையாள நடிகை மமிதா நாயகியாக நடிக்கிறார். சூர்யா 46 என தற்காலிகமாகப் பெயரிடப்பட்டுள்ள இப்படம் ஒரு மகிழ்ச்சியான குடும்பப் படமாக இருக்கும் என்று வெங்கி அட்லூரி தெரிவித்துள்ளார். மேலும் சூர்யாவின் கதாபாத்திரம் கஜினி படத்தில் வந்த சஞ்சய் ராமசாமி கதாபாத்திரத்தைப் போன்றதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

24
சூர்யா 46 கதை மாற்றம்

முதலில் சூர்யாவை வைத்து ஒரு பயோபிக் படத்தை தான் உருவாக்க திட்டமிட்டிருந்தாராம் வெங்கி அட்லூரி. அதற்கான உரிமைகளைப் பெறுவதில் தாமதம் ஏற்பட்டதால், குடும்பங்களை மையப்பத்திய ஒரு உணர்வுப்பூர்வமான கதையை கூறினேன். அதைக்கேட்டதும் சூர்யாவுக்கு பிடித்துப் போக அவரும் ஓகே சொல்லிவிட்டாராம். அதன் கிளைமாக்ஸ் என்ன என்பது கூட முடிவு செய்யவில்லை. அதற்குள் சூர்யாவுக்கு பிடித்துப் போனது என வெங்கி அட்லூரி தெரிவித்துள்ளார்.

34
சொதப்பிய ரெட்ரோ

சூர்யா நடிப்பில் வெளியான கடைசி படம் ரெட்ரோ. கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இப்படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்தார். ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன், நாசர், பிரகாஷ் ராஜ், சுஜித் சங்கர், தரக் பொன்னப்பன், தமிழ், கிருஷ்ணகுமார் பாலசுப்ரமணியன், பிரேம் குமார் உள்ளிட்டோர் நடித்த இப்படம் வசூல் ரீதியாகப் பின்னடைவைச் சந்தித்தது. ஜாக்கி மற்றும் மாயபாண்டி ஆகியோர் கலை இயக்குநர்களாகப் பணியாற்றியுள்ளனர். பிரவீன் ராஜ் ஆடை வடிவமைப்பாளராகவும், கெச்சா கம்ஃபக்டே சண்டைப் பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளனர்.

2D எண்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இப்படத்தை ராஜசேகர் கார்ப்பூர சுந்தரபாண்டியன், கார்த்திகேயன் சந்தானம் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். வினோத் சுகுமாரன் ஒப்பனையாளராகவும், சுரேன் ஜி, அழகியகூத்தன் ஆகியோர் ஒலி வடிவமைப்பாளர்களாகவும், ஷெரிஃப் எம் நடன இயக்குநராகவும், முகமது சுபைர் ஆடை வடிவமைப்பாளராகவும், தினேஷ் எம் புகைப்படக் கலைஞராகவும், டூன் ஜான் விளம்பர வடிவமைப்பாளராகவும், பி. செந்தில் குமார் தயாரிப்பு மேற்பார்வையாளராகவும், கணேஷ் பி.எஸ். தயாரிப்பு நிர்வாகியாகவும் பணியாற்றியுள்ளனர்.

44
சூர்யாவின் அடுத்த படம்

சூர்யா நடிப்பில் ரெட்ரோவுக்கு முன்பு வெளியான படம் கங்குவா. சிறுத்தை சிவா இயக்கிய இப்படம் உலகளவில் 100 கோடி வசூலித்தாலும், அதன் பெரிய பட்ஜெட்டைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது தோல்விப் படமாகவே அமைந்தது. வெற்றிவேல் பழனிசாமி ஒளிப்பதிவு செய்த இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்தார். தற்போது நடிகர் சூர்யா நடிப்பில் கருப்பு என்கிற திரைப்படம் தயாராகி உள்ளது. இப்படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கி உள்ளார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். இப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories