ஷங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தமன். அப்படத்தின் நடிகராக அறிமுகமான தமன், அதன்பின் நடிப்பை நிறுத்திவிட்டு இசையமைப்பாளராக எண்ட்ரி கொடுத்தார். கடந்த 2009-ம் ஆண்டு தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானார் தமன். சிந்தனை செய், ஈரம், தில்லாலங்கடி, மாஸ்கோவின் காவிரி, அய்யனார் என தமிழில் தமன் இசையமைத்த படங்களில் பாடல்கள் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகின.
இதையடுத்து தெலுங்கு திரையுலகம் பக்கம் சென்ற தமனுக்கு அங்கு அடுத்தடுத்து பிரம்மாண்ட பட வாய்ப்புகள் கிடைத்ததால், கோலிவுட்டிற்கு ரெஸ்ட் விட்ட தமன், டோலிவுட்டில் முன்னணி இசையமைப்பாளராக உருவெடுத்தார். தெலுங்கில் டாப் ஸ்டார்கள் படங்களுக்கு இசையமைத்தாலும், அவ்வப்போது தமிழ் படங்களுக்கு இசையமைத்து வருகிறார் தமன். அந்த வகையில் சமீபத்தில் தமிழில் இவர் இசையமைப்பில் வெளிவந்த விஜய்யின் வாரிசு படத்தில் பாடல்கள் அனைத்தும் பட்டைய கிளப்பின.
தற்போது தெலுங்கில் திரும்பிய பக்கமெல்லாம் தமன் ராஜ்ஜியம் தான். அவர் கைவசம் பவன் கல்யாணின் ப்ரோ படம் உள்ளது. இப்படத்தை சமுத்திரக்கனி தான் இயக்கி உள்ளார். இதுதவிர பாலகிருஷ்ணாவின் பகவந்த் கேசரி, ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் கேம் சேஞ்சர், மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் என லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது. இப்படி பிசியான இசையமைப்பாளராக வலம் வரும் தமன் தற்போது சர்ச்சை ஒன்றில் சிக்கி உள்ளார்.
இதையும் படியுங்கள்... ரஜினிகாந்த் வீட்டுக்கு திடீர் விசிட் அடித்த ஆஸ்திரேலிய துணைத் தூதர் - ஓஹோ இதுதான் விஷயமா!
தெலுங்கில் பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களை கைவசம் வைத்துள்ள தமனுக்கு சொந்தமாக ஸ்டூடியோ எதுவும் இல்லையாம். இதனால் அவர் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள பார்க் ஹயாத் ஹோட்டலில் தான் ரூமை வாடகைக்கு எடுத்து அங்கு இசையமைத்து வருகிறாராம். அங்கு அவர் பெயரில் ஏராளமான அறைகள் புக் செய்யப்பட்டு உள்ளதாம். அவர் புக் செய்துள்ள இந்த அறைகளுக்கு வாடகையை தயாரிப்பாளர்கள் தான் கட்டுவார்களாம்.
அந்த வகையில், சமீபத்தில் தனது ஹோட்டல் பில்லை தயாரிப்பாளருக்கு அனுப்பி இருக்கிறார் தமன். அவர் அனுப்பிய பில்லை பார்த்து தயாரிப்பாளர் ஷாக் ஆகிப் போனாராம். ஏனெனில் அவர் அனுப்பிய பில்லின் தொகை ரூ.40 லட்சமாம். இதைப்பார்த்ததும் இவருக்கு ரூம் போட்டு கொடுத்தது குத்தமா போச்சே என தயாரிப்பாளர் புலம்பி வருகிறாராம். இசையமைப்பாளர் தமனின் இந்த செயல் டோலிவுட் வட்டாரத்தில் பேசு பொருள் ஆகி உள்ளது.
இதையும் படியுங்கள்... சித்தார்த்தின் 'டக்கர்' படத்தின் முதல் நாள் வசூல்! அதிகார பூர்வமாக அறிவித்த படக்குழு..!