'வாரிசு' ஆடியோ லாஞ்சுக்கு தேவதை போல் வந்த ராஷ்மிகா..! மிரட்டல் லுக்கில் வந்திறங்கிய பிரபலங்களின் போட்டோஸ்..!

First Published | Dec 24, 2022, 9:03 PM IST

வாரிசு இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த பிரபலங்களின் ஸ்பெஷல்... புகைப்பட தொகுப்பு இதோ...
 

'வாரிசு' படத்தின் ஸ்டைலிஷ் நாயகன், தளபதி விஜய் இசை வெளியீட்டு விழா மேடைக்குள் நுழைந்ததுமே ரசிகர்கள் ஆர்ப்பரித்து, தளபதியை வரவேற்ற தருணம். 

வாரிசு படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளவர் நடிகர், ஷாம். பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ள ஷியாம். இந்த படத்தில் கதைக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கும் வேடத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. 

Tap to resize

நடிகை ராஷ்மிகாவின் நீண்ட நாள் கனவு என்றால் அது விஜய்க்கு ஜோடியாக நடிக்கவேண்டும் என்பது தான். அவருடைய இந்த கனவை நிறைவேற்றும் விதமாக 'வாரிசு' படம் அமைந்துள்ளது.

வாரிசு படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜும் மிக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஆனால் இவருடைய கதாபாத்திரம் குறித்து தற்போது வரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

வாரிசு படத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து பாடல்களையும் எழுதியுள்ளவர் பாடலாசிரியர் விவேக் தான். இவர் வரிகளில் மொத்தம் 6 பாடல்கள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தளபதி விஜய்யின் அடுத்த படத்தை இயக்க உள்ள, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் இசையமைப்பாளர் அனிரூத் ஆகியோர் ஆடியோ லான்ச் துவங்குவதற்கு முன்பே, நேரு ஸ்டேடியத்திற்கு வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்தனர்.
 

பிரபல நடிகரும், பிக்பாஸ் பிரபலமுமான கணேஷ் வெங்கட்... வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்த போது எடுத்துக்கொண்ட புகைப்படம்.
 

விஜய்யின் பல படங்களுக்கு நடன இயக்குனராக பணியாட்டியுள்ள ஷோபி மாஸ்டர்... வாரிசு இசை வெளியீட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டபோது எடுத்துக்கொண்ட புகைப்படம் 

பிரபல இசை கலைஞர் ட்ரம்ஸ் சிவமணி... தளபதி விஜய்யின் வாரிசு இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டபோது எடுத்து கொண்ட புகைப்படம். 

'வாரிசு' படத்தில், விஜய்க்கு தந்தை கதாபாத்திரத்தில் நடித்துள்ளவர் நடிகர் சரத்குமார். வாரிசு இசை வெளியீட்டு விழாவுக்கு, கோல்டன் கோர்ட் சூட்டில் செம்ம கெத்தாக வந்தபோது எடுத்து கொண்ட போட்டோஸ்.

Latest Videos

click me!