1970-களில் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜெயசுதா. இவர் தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழிகளில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக வம்சி இயக்கத்தில் உருவாகி உள்ள வாரிசு படத்தில் கூட நடிகர் விஜய்க்கு அம்மாவாக நடித்துள்ளார் ஜெயசுதா.
இவர் பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா நடத்தும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது மத்திய அரசி தென்னிந்திய நடிகைகளை தொடர்ந்து புறக்கணித்து வருவதாக தனது ஆதங்கத்தை பதிவு செய்தார். அதில் அவர் பேசியதாவது : “பாலிவுட் நடிகை கங்கனாவுக்கு பத்மஸ்ரீ விருதுகள் கொடுத்துள்ளனர். அவர் சிறந்த நடிகை தான், ஆனாலும் வெறும் 10 படங்களில் மட்டுமே நடித்துள்ள அவருக்கு இவ்வளவு பெரிய விருது வழங்கப்பட்டு இருக்கிறது.
இதையும் படியுங்கள்... bollywood superstar: என்ன தான் பண்ணுவாரு? 57 வயசிலும் சல்மான் கான் பிட்டாக இருக்க என்ன காரணம் தெரியுமா?
என்னைப்போன்ற ஏராளமான தென்னிந்திய நடிகைகள் ஏராளமான படங்களில் நடித்திருந்தும், இன்னும் நாங்கள் மத்திய அரசால் அங்கீகரிக்கப்படாமல் தான் இருக்கிறோம். 40 படங்களுக்கு மேல் டைரக்ட் செய்து கின்ன்ஸ் புத்தகத்தில் இடம்பெற்ற இயக்குனர் விஜய நிர்மலாவுக்கு கூட இதுபோன்ற உயரிய விருதுகள் கிடைத்ததில்லை.