மீண்டும் சோழ தேசத்துக்கு செல்ல ரெடியா... பொன்னியின் செல்வன் 2 பற்றி வெளியாக உள்ள சர்ப்ரைஸ் அப்டேட் இதுதான்

First Published | Dec 28, 2022, 11:50 AM IST

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில், தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவின் தலைசிறந்த இயக்குனராக விளங்கி வருபவர் மணிரத்னம். அவர் இயக்கத்தில் இந்த ஆண்டு ரிலீசான பொன்னியின் செல்வன் திரைப்படம் பிரம்மாண்ட வெற்றியை ருசித்தது. லைகா நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்தில் ஐஸ்வர்யா ராய், விக்ரம், கார்த்தி, திரிஷா, ஜெயம் ரவி, ஷோபிதா, ஐஸ்வர்யா லெட்சுமி, ஜெயராம், சரத்குமார், பிரபு, விக்ரம் பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தது.

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை மையமாக வைத்து இப்படத்தை இயக்கி இருந்தார் மணிரத்னம். இப்படத்தின் முதல் பாகம் கடந்த செப்டம்பர் மாதம் ரிலீசாகி ரூ.500 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியது. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் அதிக வசூல் ஈட்டிய படமும் இதுதான். அதுமட்டுமின்றி தமிழ்நாட்டில் அதிக கலெக்‌ஷன் செய்த படம் என்கிற சாதனையையும் பொன்னியின் செல்வன் படைத்திருந்தது.

Tap to resize

இவ்வாறு பல்வேறு சாதனைகளை படைத்த பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் எப்போது ரிலீஸ் ஆகும் என்கிற ஆர்வம் ரசிகர்கள் பலருக்கும் இருந்து வருகிறது. ஏனெனில் இந்த இரண்டாம் பாகத்தில் தான் ஆதித்ய கரிகாலனை கொன்றவர் யார் என்பது தெரிந்துகொள்ள பலரும் ஆர்வமாக உள்ளனர். கல்கி கூட அது யார் என்பதை தனது நாவலில் தெளிவாக கூறி இருக்க மாட்டார். அதனால் மணிரத்னம் அதனை எப்படி கையாண்டுள்ளார் என்பதை அறிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

இதையும் படியுங்கள்... புலி வாலை பிடித்தபடி வீடியோ போட்டு சர்ச்சையில் சிக்கிய சந்தானம்... புரட்டி எடுக்கும் நெட்டிசன்கள்

பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பை ஏற்கனவே எடுத்துமுடித்துவிட்டார் இயக்குனர் மணிரத்னம். அதன் பேட்ச் ஒர்க் மற்றும் இசை ஆகிய பணிகள் மட்டுமே எஞ்சியுள்ளன. அதற்கான வேலைகளும் அடுத்த மாதம் தொடங்கி நடைபெற உள்ளது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் 2-ம் பாகம் குறித்த முக்கிய அப்டேட்டை இன்று மாலை 4 மணிக்கு வெளியிட உள்ளதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி அப்படத்தின் ரிலீஸ் அப்டேட்டை தான் இன்று மாலை வெளியிட இருக்கிறார்கள். பொன்னியின் செல்வன் 2-ம் பாகம் வருகிற 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28-ந் தேதி வெளியிடப்பட உள்ளது. அதற்கான அறிவிப்பு தான் இன்று வெளியாக இருக்கிறது. இப்படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் கைப்பற்றி உள்ள தகவலை ஏற்கனவே உதயநிதி பல பேட்டிகளில் கூறிவிட்டதால் அதற்கான அறிவிப்பும் இன்று வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... ஏன் விஜய்க்கு போட்டியா நான் இருக்கக்கூடாதா?... வாய்விட்டு மாட்டிக்கொண்டு பாதியில் ஓடிய TTF வாசன்

Latest Videos

click me!