சிம்ரன், ஜோதிகாவை தரக்குறைவாக பேசினாரா விஜய்? - வாரிசு நடிகரின் பேட்டியால் வெடித்த சர்ச்சை

Published : Dec 10, 2022, 03:13 PM IST

நடிகர் ஷியாம், சமீபத்திய பேட்டியில் விஜய் பற்றி சொன்ன ஒரு தகவல் தற்போது பூதாகரமாக வெடித்து சமூக வலைதளங்களில் பேசுபொருள் ஆகி உள்ளது.

PREV
16
சிம்ரன், ஜோதிகாவை தரக்குறைவாக பேசினாரா விஜய்? - வாரிசு நடிகரின் பேட்டியால் வெடித்த சர்ச்சை

நடிகர் விஜய்யின் 66-வது படம் வாரிசு. தெலுங்கு திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் வம்சி பைடிபல்லி தான் இப்படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். தில் ராஜு தயாரித்துள்ள இப்படம் வருகிற 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு திரைகாண உள்ளது.

26

வாரிசு படத்துக்கு தமன் இசையமைத்து உள்ளார். இதுவரை இப்படத்தில் இருந்து வெளியான ரஞ்சிதமே மற்றும் தீ தளபதி ஆகிய இரண்டு பாடல்களும் பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பி வருகிறது. வருகிற டிசம்பர் 24-ந் தேதி வாரிசு படத்தின் இசைவெளியீட்டு விழாவை சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடத்த உள்ளனர்.

36

வாரிசு படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒருமாதமே எஞ்சி உள்ளதால், அதன் புரமோஷன் பணிகளும் தற்போதே தொடங்கி முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. ரஜினியின் கபாலி மற்றும் சூர்யாவின் சூரரைப் போற்று ஆகிய படங்களுக்கு செய்தது போல் வாரிசு படத்திற்கு விமானத்தில் புரமோஷன் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... டபுள் எவிக்‌ஷனால் கணக்கு மாறப்போகுது... பிக்பாஸில் குரூப்பாக விளையாடுபவர்களை வறுத்தெடுக்க ரெடியான கமல்

46

இதுதவிர இப்படத்தில் விஜய்யுடன் நடித்த நடிகர், நடிகைகளும் தொடர்ந்து பல்வேறு பேட்டிகளை கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் வாரிசு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் ஷியாம், சமீபத்திய பேட்டியில் விஜய் பற்றி சொன்ன ஒரு தகவல் தற்போது பூதாகரமாக வெடித்து சமூக வலைதளங்களில் பேசுபொருள் ஆகி உள்ளது.

56
Shaam

அதில் அவர் பேசியதாவது : குஷி பட ஷூட்டிங்கின்போது ஒருநாள் விஜய் அண்ணாவை சந்தித்தபோது, நீங்க தான் அடுத்த சூப்பர்ஸ்டார்னு சொல்றாங்களேனு கேட்டேன். அதற்கு அவர் கையை மேலே காட்டி எல்லாம் அவன் செயல் என கூறினார். அதையடுத்து நான் 12பி படத்தில் ஹீரோவாக அறிமுகமான பின்னர் விஜய் அண்ணாவை மீண்டும் சந்தித்தேன்.

66

அப்போது எனக்கு வாழ்த்து சொன்ன அவர், என்னடா வரும்போதே சிம்ரன், ஜோதிகானு ரெண்டு குதிரைங்களோட நடிச்சிருக்கனு கேட்டார். நானும் அப்போது அவர் முன்னர் கூறியதைப் போலவே மேலே கையை காட்டி எல்லாம் அவன் செயல்னு சொன்னேன்” என பேசியுள்ளார். இவ்வாறு நடிகைகளை குதிரையுடன் விஜய் ஒப்பிட்டு பேசியது சர்ச்சையை கிளப்பி உள்ளது. 

இதையும் படியுங்கள்...  காந்தாரா சர்ச்சை முதல் கன்னடத்தில் நடிக்க தடை வரை... சர்ச்சைகளுக்கு ராஷ்மிகா கொடுத்த நெத்தியடி பதில்

Read more Photos on
click me!

Recommended Stories