'வஞ்சகர் உலகம்' பட இயக்குனருக்கும் பிரபல நடிகைக்கும் எளிமையாக நடந்த திருமணம்! பிரபலங்கள் வாழ்த்து...

First Published | Aug 21, 2020, 7:40 PM IST

'வஞ்சகர் உலகம்' பட இயக்குனருக்கும் பிரபல நடிகைக்கும் எளிமையாக நடந்த திருமணம்! பிரபலங்கள் வாழ்த்து...
 

தமிழில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான 'வஞ்சகர் உலகம்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மோனோஜ் பீதா.
இவருக்கும், தெலுங்கு மற்றும் கன்னட திரையுலகத்தில் 5 திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமான, ஷாலினி வட்னிகட்டிக்கும் இன்று, மிகவும் எளிமையான முறையில் திருமணம் நடந்துள்ளது.
Tap to resize

இன்று நடைபெற்ற இவர்களுடைய திருமணத்தில், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுத்திருந்தனர்.
இருவரும் பிரபலங்கள் என்பதால், பிரமாண்டமாக திட்டமிடப்பட்ட இவர்களுடைய திருமணம் எளிமையாக நடந்து முடித்துள்ளது.
திருமணம் முடிந்து இவர்களுடைய புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாக ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தொடர்ந்து தங்களுடைய வாழ்த்தை தெரிவித்து வருகிறார்கள்.
இயக்குனர் - நடிகை திருமணம் கொரோனா பரபரப்பு காரணமாக... எந்த ஒரு பரபரப்பும் இல்லாமல் முடிந்துள்ளது.

Latest Videos

click me!