வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா தற்போது 18 வயது பருவ பெண்ணாக வளர்ந்து நிற்கும் நிலையில் விரைவில் ஹீரோயினாக அறிமுகமாவாரா? என நெட்டிசன்கள் பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
பழம்பெரும் நடிகர் விஜயகுமார் - மஞ்சுளா தம்பதியின் மூத்த மகளான வனிதா விஜயகுமார்... தளபதி விஜய்க்கு ஜோடியாக, 'சந்திரலேகா' படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படம் தோல்வி அடைந்தாலும், இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் ஹிட்டடித்தது. 'சந்திரகேலா' படத்தை தொடர்ந்து, ராஜ்கிரணுக்கு ஜோடியாக மாணிக்கம் படத்தில் நடித்தார். இந்த படம் வெற்றிப்படமாக அமைந்தாலும்... எண்ணி 5 படங்கள் மட்டுமே நடித்து விட்டு திரையுலகில் இருந்தே விலகினார்.
26
நாடகம் ஒன்றில் நடித்த போது, தொழிலதிபரும் - நடிகருமான ஆகாஷ் என்பவரை வனிதா விரும்பிய நிலையில் இவருக்கும் பெற்றோர் சம்மதத்துடன், 2000-ஆம் ஆண்டு திருமணமும் நடந்தது. இவர்களின் வாழ்க்கை ஆரம்பத்தில் மிகவும் இனிமையான ஒன்றாகவே இருந்தது. வனிதா ஆகாஷ் தம்பதிக்கு ஸ்ரீ ஹரி என்கிற மகனும், ஜோவிகா என்கிற மகளும் பிறந்தனர்.
ஜோவிகா பிறந்த இரண்டு வருடத்தில் ஆகாஷ் - வனிதா ஜோடிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விவாகரத்து வரை சென்றது. ஆகாஷிடம் இருந்து விவாகரத்து பெற்ற இவர்... விவாகரத்து பெற்ற சில மாதங்களிலேயே ஆனந்த் ஜெயராம் என்பவரை திருமணம் செய்து கொண்டு மூன்றாவது பெண் குழந்தையையும் பெற்றெடுத்தார். பின்னர் ஆனந்திடம் இருந்து, 2012 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார்.
46
இதை தொடர்ந்து, டான்ஸ் மாஸ்டர் ராபட்டுடன் காதல் கிசுகிசுவில் சிக்கினார். அதே போல் தன்னுடைய மகனுக்காக வனிதா போராடியது, குடும்பத்தினரால் வெறுத்து ஒதுக்கப்பட்டது என பல சம்பவங்கள் இவரை சுழற்றி அடித்தபோதும்... எப்போதுமே இவருடன் இருந்தவர் என்றால் அது வனிதாவின் மூத்த மகளான ஜோவிகா தான். எத்தனையோ சர்ச்சைகள் வந்தாலும் வனிதாவை தட்டி கொடுத்து தேற்றியது ஜோவிகா என சில பேட்டிகளில் வனிதாவே கூறியுள்ளார்.
ஜோவிகா தற்போது தன்னுடைய 18-ஆவது பிறந்தநாளை கொண்டாடி உள்ளார். இதுகுறித்த சில புகைப்படங்களை வெளியிட்டு வனிதா தெரிவித்துள்ளார். ஜோவிகா ஹீரோயின் போல் இருப்பதாகவும், எனவே தமிழ் சினிமாவுக்கு அடுத்த ஹீரோயின் தயார் என பலர் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
66
அதே போல், வனிதா விஜய்க்கு ஹீரோயினாக அறிமுகமானது போல்... ஜோவிகா விஜய்யின் மகனுக்கு ஜோடியாக அறிமுகமாகலாம் என சிலர் தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்தி வருகிறார்கள். வனிதா தன்னுடைய பிள்ளைகள் சினிமாவிற்கு வருவதை உறுதி செய்திருந்தாலும்... விஜய் மகனுக்கு ஜோடியாக ஜோவிகா மாறுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.