தலைசுற்ற வைக்கும் ராதிகா சரத்குமாரின் சொத்து கணக்கு! பேங்க் பேலன்ஸ் எவ்வளவு இருக்கு தெரியுமா?

First Published | Aug 21, 2023, 10:48 PM IST

சினிமா, சீரியல், அரசியல் என சாதித்துவரும் ராதிகா சரத்குமார் சொத்து மதிப்பு, பேங்க் பேலன்ஸ் எத்தனை கோடி இருக்கும் என்று பார்த்தால் கொஞ்சம் மலைப்பாக தான் இருக்கும்.

நடிகை ராதிகா

சினிமாவில் ஹீரோக்களுடன் பல ஹிட் படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை ராதிகா. அதோடு நின்றுவிடாமல் டிவி சீரியல்களில் தனது அடுத்த இன்னங்சிஸைத் தொடங்கினார். கணவர் சரத்குமாருடன் இணைந்து அரசியல் களத்திலும் கலக்கி வருகிறார். எதையும் தைரியமாகப் பேசும் குணமுடைய ராதிகா சரத்குமாருக்கு அவர் ஈடுபட்ட ஒவ்வொரு துறையிலும் தனி மரியாதை உண்டு.

அம்மா என்றால் ராதிகா

61வது பிறந்தாளைக் கொண்டாடும் ராதிகா, 45 ஆண்டுகளாக சினிமாவில் தொடர்ந்து நடித்துவருகிறார். இன்றும் இப்போது விஜய், அஜித், தனுஷ், விஜய் சேதுபதி என பல மாஸ் ஹீரோக்களுக்கு அம்மாவாக நடிக்கிறார். அவரது திரைப் பயணம் தமிழுடன் முடியவில்லை. தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழிகளில் தன் திறமையைக் காட்டியிருக்கிறார்.

Tap to resize

வெற்றி மேல் வெற்றி

சினிமாவில் இத்தனை ஆண்டுகள் தாக்குப்பிடிக்கும் அவருக்குக் கிடைக்கும் வெற்றிகள் ஒவ்வொன்றும் ஏராளமான செல்வத்தையும் அவருக்குக் கொடுத்திருக்கின்றன. அவரது சொத்துக்களாக என்னென்ன எல்லாம் இருக்கின்றன என்று தெரிந்தால் சிலருக்கு தலை சுற்ற ஆரம்பிக்ககூடும்.

ராதிகாவின் கார்கள்

கார் என்றால் ராதிகாவுக்கு அலாதி பிரியம். அதனால் ரேஞ்ச் ரோவர், ஆடி, பென்ஸ், நிஸான் என விதவிதமான கார்கள் இருக்கின்றன. இத்தனை கார்களும் சென்னையில் உள்ள அவரது பிரம்மாண்டமான பங்களாவில்தான் இருக்கின்றன.

ராதிகாவின் சம்பளம் எவ்வளவு?

இன்றும் ராதிகாவுக்கு அவர் நடிப்புக்காக தனி மார்க்கெட் இருக்கிறது. அவர் நடிக்கக்கூடிய ரோலில் வேறு யாரும் பொருந்தமாட்டார்கள் என்று நினைக்கும் பல இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் இருக்கிறார்கள். இதனால்தான் ஒவ்வொரு படத்திலும் அவருடைய சம்பளம் ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை இருக்கிறது.

ராதிகா சரத்குமார் பேங்க் பேலன்ஸ்

இவ்வளவு செழிப்பாக சம்பாதிக்கும் ராதிகாவின் பேங்க் பேலன்ஸ் எத்தனை கோடி இருக்கும் என்று பார்த்தால் கொஞ்சம் மலைப்பாக தான் இருக்கும். ராதிகாவின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு ரூ.100 கோடி முதல் ரூ.120 கோடி வரை இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

Latest Videos

click me!