Anupama Parameswaran
ப்ரேமம் படத்தில், ரெட்டை ஜடையில் ஸ்கூல் யூனிஃபாமில் தோன்றி, தன்னுடைய மிதமான அழகால் ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர் அனுபமா பரமேஸ்வரன்.
Anupama Parameswaran
மலையாளத்தில் பிஸியாக இருந்து இவர், பின்னர் தமிழில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த 'கொடி' திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகினார். ஆனால் இப்படம் இவருக்கு தோல்வி படமாக அமைந்ததால் தமிழில் இவருக்கு அடுத்தடுத்த படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைக்காமல் போனது..
Anupama Parameswaran
பின்னர் தெலுங்கு திரையுலகின் பக்கம் சாய்ந்த இவருக்கு, வளர்ந்து வரும் இளம் தெலுங்கு நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. சில முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்து வெற்றிப்பட நாயகியாக மாறினார்.
Anupama Parameswaran
தற்போது இவரின் கைவசம் தமிழில் சைரன் மற்றும் மலையாளத்தில் ஒரு படம் உள்ள நிலையில், பட வாய்ப்புகளை பெற விதவிதமான போட்டோ ஷூட் செய்து அந்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.