பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் என்ட்ரி கொடுத்த பின்னர், பட்டி தொட்டி இறுகும் ஃபேமஸ் ஆகிவிட்ட வனிதா விஜயகுமார்... பிடித்த இடத்தை தக்க வைத்து கொள்ள அடுத்தடுத்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமாகியது மட்டும் இன்றி, பல சர்ச்சையில் சிக்கி வெளியே வந்துள்ளார்.
மீண்டும் திரைப்படம், மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிசியாக இருக்கும் வந்தியா, சமீபத்தில் துவங்கப்பட்ட பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடைய நடன திறமையை வெளிப்படுத்தி வந்தார்.
இந்நிலையில் திடீர் என, இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறுவதாகவும், இதற்க்கு காரணம் ஒரு மூத்த நடிகை என்பது போல் அவர் பெயரை குறிப்பிடாமல் கூடிய போதே, ரம்யா கிருஷ்ணனை தான் இவர் கூறுகிறார் என்பதை நெட்டிசன்கள் கண்டு பிடித்து விட்டனர்.
இதுகுறித்து ரம்யா கிருஷ்ணனிடம் கேள்வி எழுப்பியதற்கு இது ஒரு பிரச்சனையே இல்லை என கூலாக பதில் கூறினார். அதே நேரத்தில், வனிதா வெளியேறியதால்... அவருடன் நடனமாடிவந்த சுரேஷ் தாத்தாவும் வெளியேறும் நிலை உருவானது.
ஏற்கனவே இவர்களின் காரம் சாரமான விவாதம் குறித்து ஒரு புரோமோ வெளியாகியுள்ள நிலையில், இரண்டாவதாக ஒரு புரோமோவும் வெளியாகியுள்ளது.
இதில் அதில் வனிதாவின் உடை மற்றும் அலங்காரத்தை பாராட்டிய ரம்யா கிருஷ்ணன், அவருடைய நடனத்தை விமர்சனம் செய்தார். அதேபோல் இன்னொரு நடுவரான நடிகர் நகுலும் டான்ஸ் ஸ்டெப்ஸ் இன்னும் நன்றாக இருந்திருக்கலாம் என கூறுகிறார்.
இதனால் மிகவும் கோவமான வனிதா, தன்னுடைய நடன இயக்குனரை அழைக்க வேண்டும் என கூறி, வாக்குவாதம் செய்வது தெரிகிறது. புன்னர் மற்றவர்களுடன் தன்னை ஒப்பிட வேண்டாம் என்று வனிதா கூற இதனால் கடுப்பான ரம்யா கிருஷ்ணன், நான் எப்படி தீர்ப்பு வழங்க வேண்டும் என்று கூறுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்று சொல்கிறார்.
பின்னர் வனிதா அங்கிருந்த வெளியேறுவதும் அவரை ரம்யா கிருஷ்ணன் கோபத்துடன் பார்ப்பதுடன் இந்த வீடியோ நிறைவடைகிறது.