பிக்பாஸ் பிரபலத்தை காதலிக்கிறாரா 'வாணி ராணி' சீரியல் நடிகை..! செம்ம ஷாக்கில் ரசிகர்கள்..!

First Published | Feb 22, 2021, 1:16 PM IST

நடிகை ராதிகா நடித்த சூப்பர் ஹிட் சீரியல், 'ராணி வாணி' சீரியலில் ராதிகாவுக்கு மருமகளாக நடித்த, நவ்யா சுவாமி தற்போது பிக்பாஸ் பிரபலம் ஒருவரை காதலித்து வருவதாக கூறப்படுகிறது.
 

வாணி ராணி, ரன், போன்ற தமிழ் சீரியல்களிலும், அமே கதா, நா பெரு மீனாட்சி, போன்ற தெலுங்கு சீரியல்களிலும் நடித்துள்ளவர் நடிகை நவ்யா சுவாமி.
தற்போது இவர், பிக்பாஸ் தெலுங்கு சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடிய ரவி கிருஷ்ணா என்பவருடன் இணைந்து சீரியலில் நடித்து வருகிறார்.
Tap to resize

இந்த சீரியலில் இவர்கள் இருவருக்கும் நடுவே... காதல் கெமிஸ்ட்ரி எக்க சக்கமாக ஒர்க் அவுட் ஆகி வருவதாக கூறப்படுகிறது.
எனவே தற்போது இவர்கள் இருவரும், நிஜமாகவே காதலிக்க துவங்கி விட்டதாகவும் ஒரு கிசுகிசு தெலுங்கு திரையுலகில் கூறப்படுவது ரசிகர்களை அதிச்சியடைய வைத்துள்ளது.
மேலும் இவர்கள் இருவரும் சமீபத்தில் நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாகவும், அப்போது... இருவரும் காதலை சொல்லும் ஒரு தருணத்தை யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு தத்ரூபமாக செய்து காட்டியுள்ளனர்.
இவர்களை பற்றிய காதல் கிசுகிசு தீயாக சுற்றி வரும் நிலையில்... தற்போது வரை இவர்கள் இருவரும் காதல் குறித்து எந்த ஒரு தகவலையும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!