விஜய்காந்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? முன்னணி நடிகர்களை விட குறைவா!

Kanmani P   | Asianet News
Published : May 20, 2022, 08:10 PM IST

பிரபல நடிகரும், அரசியல் தலைவருமான விஜயகாந்தின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

PREV
14
விஜய்காந்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? முன்னணி நடிகர்களை விட குறைவா!
Vijayakanth

நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனராக வெற்றி பெற்ற விஜயகாந்த் தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளை சமீபத்தில் கொண்டாடினார். 150 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் திரை உலகிற்குள் நுழைந்த 1980 -ம் ஆண்டிலேயே நீரோட்டம்,சாமந்திப்பூ, தூரத்து இடி முழங்குது என அடுத்தடுத்து மூன்று படங்களில் நடித்தார். இதில் தூரத்து இடி முழங்குது என்னும் படம் இவருக்கு பாராட்டுகளை பெற்று கொடுத்தது.

24
vijayakanth

70களின் இறுதியில் துணை நடிகராக அறிமுகமான விஜயகாந்த் 90 களில் கொடிகட்டி பறந்தார். வருடத்திற்கு 6 படங்கள் வரை கொடுக்கும் மிக முக்கிய முன்னணி நாயகனாக உருவெடுத்த நின்ற இவர் விஜயகாந்த் தனது மைத்துனர் எல்.கே.சுதீஷுடன் இணைந்து கேப்டன் சினி கிரியேஷன்ஸ் என்ற நிறுவனத்தின் கீழ் படங்களை தயாரித்துள்ளார். வல்லரசு, நரசிம்மா, தென்னவன், எங்கல் அண்ணா, சுதேசி, அரசங்கம், விருத்தகிரி,சகாப்தம்  உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார்.

34
vijayakanth

அரசியல் தலைவரான பிறகு படங்களில் நடிப்பதை குறைத்து கொண்ட விஜயகாந்த், கடந்த 2010 ம் ஆண்டு தனது மகன் சண்முக பாண்டியன் நடித்த சகாப்தம், தமிழன் என்று சொல் ஆகிய இப்படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.  முழு நேர அரசியல் தலைவரான இவர் 2011 முதல் 2016 வரை தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர். 

44
vijayakanth

சினிமா, அரசியல் என கொடிகட்டி பறந்த விஜயகாந்தின் சொத்து மதிப்பு குறித்த தகவல் கசிந்துள்ளது. இந்த டேட்டவை பார்த்த ரசிகர்கள் அதிர்சியடைந்துள்ளனர். இன்றைய முன்னணி நாயகர்கள் ஒரு படத்திற்கே 100 கோடிக்கு மேல் சம்பளம் பெறுகையில் 25 ஆண்டுகளாக ரசிகர்களை ஆண்ட கேப்டனின் சொத்து மதிப்பு சுமார் ரூ. . 45 - 50 கோடி இருக்கும் என்றும் தகவல் தெரிவிக்கின்றனர்.

Read more Photos on
click me!

Recommended Stories