அஜித் பிறந்தநாளில் ரசிகர்களின் வீடு தேடி வரும் விருந்து. ..அடுத்தகட்ட பிரீமியர் அப்டேட்..

Kanmani P   | Asianet News
Published : Apr 19, 2022, 04:13 PM IST

வலிமை திரைப்படம் அஜித்தின் பிறந்தநாள் அன்று டிவியில் ஒளிபரப்பாக உள்ளது என பிரபல தொலைக்காட்சி ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. 

PREV
18
அஜித் பிறந்தநாளில் ரசிகர்களின் வீடு தேடி வரும் விருந்து. ..அடுத்தகட்ட பிரீமியர் அப்டேட்..
VALIMAI

எச்.வினோத் இயக்கத்தில் அஜித்  நடிப்பில் சமீபத்தில் வெளியான வலிமை படம். கலவையான விமரசங்களையே பெற்று வருகிறது.

28
VALIMAI

போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, ஜிப்ரான் பின்னணி இசையமைத்துள்ளார். இதில் காலா பட நாயகி ஹீமா குரேஷி அஜித்தின் தோழியாக நடித்திருந்தார்

38
valimai

நடிகர் அஜித் போலீஸ் அதிகாரியாக வரும் அஜித் பைக் ரேசில் ஈடுபடும் போதை பொருள் கும்பலை விரட்டி வேட்டையாடும் ஆக்ஷன் சீக்வன்ஸ் மையமாக வைக்கப்பட்டிருந்தது. 

48
valimai

இந்த படத்தில் இடம்பெற்ற, பைக் ரேஸ் காட்சிகள், சண்டைகாட்சிகள் சென்டிமெண்ட் போன்றவை அஜித் ரசிர்கர்களை பெரிதும் கவர்ந்தது. ஆனாலும் இந்த படம் போதுமான வரவேற்பை பெறவில்லை.

58
valimai

முன்னதாக பல காத்திருப்புக்கு பிறகு தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளில் கடந்த பிப்ரவரி 24-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.

68
valimai

திரையரங்கில் வெளியான சில வாரங்களுக்குப் பிறகு OTT தளத்தில் மார்ச் மாதம் திரையிடப்பட்டது, மொத்தமாக ரூ 235 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூல் செய்தது.

78
valimai

திரையரங்குகளில் மோசமான விமர்சனத்தை சந்தித்த வலிமை டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் திரையிடப்பட்டபோது  500 + ஸ்ட்ரீமிங்கை பெற்று மினிட்ஸ் கிளப்பில் நுழைந்துள்ளதாக சமீபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

88
valimai

இந்நிலையில் வலிமை படத்தின் சேட்டிலைட் உரிமையை பிரபல ஜீ தமிழ் பெற்றுள்ளது. அதோடு அஜித்தின் பிறந்தநாளான மே 1 அன்று வலிமையை ஒளிபரப்பவுள்ளதாகவும் அத்தொலைக்காட்சி அறிவித்துள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories