பீஸ்ட் விமர்சனத்தால் நெல்சன் கைவசம் இருந்த ரஜினி 169 வாய்ப்பு நழுவியதாகவும், விரைவில் வேறொரு இயக்குனருடன் தலைவர் 169 துவங்க உள்ளதாக செய்திகள் பரவி வருகிறது.
நெல்சனின் சமீபத்திய படமான பீஸ்டில் விஜயுடன் பூஜா ஹெக்டே, செல்வராகவன், ஷான் டாம் சாக்கோ, விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி, அபர்ணா தாஸ் உள்ளிட்ட பலரம் நடித்துள்ளனர்.
27
beast
சன் பிக்சர்ஸ் 175 கோடியில் தயாரித்த இந்த படம் உலக முழுவதும் 5 மொழிகளில் பிரமாண்டமாக கடந்த 13-ம் தேதி வெளியாகி ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல் சொல்கிறது.
37
beast review
ஆனாலும் விஜயின் பீஸ்ட் மிகவும் மோசமான விமர்சங்களை சந்தித்து வருகிறது. மேலும் பீஸ்ட் வெளியான அடுத்த நாளே கே ஜி எஃப் 2வும் திரையிடப்படத்தால் பீஸ்ட் வசூலிலும் படு அடிவாங்கியுள்ளது.
47
THALAIVAR 169
இதற்கிடையே நெல்சன் பீஸ்ட் படப்பிடிப்புக்கு இடையே ரஜினியை சந்தித்து கதை கூறி 169 வது படத்தை இயக்கும் நல்ல வாய்ப்பை பெற்றிருந்தார்.
57
THALAIVAR 169
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் அனிரூத் இணையமைக்கவுள்ளார். இந்த படம் குறித்த தகவல் காணொளி வடிவில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.
67
THALAIVAR 169
இந்நிலையில் பீஸ்ட் படத்தை திரையரங்கில் பார்த்த சூப்பர் ஸ்டார்..படம் குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தியதாக தகவல் பரவியது. இதையடுத்து இயக்குனர் மாற்றப்படலாம் என்றும் கூறப்பட்டது.
77
thalaivar 169
இந்த ரூமர் குறித்த உண்மை தற்போது வெளியாகியுள்ளது. அதாவது இயக்குனரை மற்றும் எண்ணம் எதுவும் சன் பிக்சர்ஸ் மற்றும் ரஜினிக்கு கிடையாதாம். இந்த படத்தில் படப்பிடிப்பு வரும் ஜூலையில் துவங்கவுள்ளதாவும் அறிவிக்கப்பட்டுள்ளது.