பாலிவுட்டில் முன்னணி தயாரிப்பாளராக வலம் வருபவர் போனி கபூர் (Boney Kapoor). இவர் கடந்த 2019-ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தின் மூலம் கோலிவுட்டில் தயாரிப்பாளராக அறிமுகமானார். எச்.வினோத் இயக்கிய இப்படத்தில் நடிகர் அஜித் ஹீரோவாக நடித்திருந்தார். இது பிங்க் என்ற பாலிவுட் படத்தின் ரீமேக் ஆகும்.
26
நேர்கொண்ட பார்வை படம் வெற்றியடைந்ததால் அஜித்தின் அடுத்த படத்தையும் தயாரிக்கும் வாய்ப்பை பெற்றார் போனிகபூர். அந்த வகையில் அவர்கள் கூட்டணியில் உருவாகி இருக்கும் இரண்டாவது திரைப்படம் தான் வலிமை (Valimai). இப்படத்தையும் எச்.வினோத் தான் இயக்கி உள்ளார். இப்படம் வருகிற பிப்ரவரி 24-ந் தேதி திரைக்கு வருகிறது.
36
இதுதவிர போனி கபூர் தயாரிப்பில் மேலும் ஒரு படமும் ரிலீசுக்கு தயாராக உள்ளது. அது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி இருக்கும் நெஞ்சுக்கு நீதி (Nenjukku neethi) படம் தான். அருண்ராஜா காமராஜ் இயக்கி உள்ள இப்படம் ஆர்ட்டிக்கிள் 15 என்கிற பாலிவுட் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இப்படமும் விரைவில் திரைகாண உள்ளது.
46
இதனிடையே சமீபத்தில் அஜித்தின் 61-வது (Ajith 61) படத்தை தயாரிக்க உள்ளதாக அறிவித்தார் போனி கபூர். எச்.வினோத் இயக்க உள்ள இப்படத்தில் நடிகர் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. வருகிற மார்ச் 9-ந் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்க உள்ளது.
56
தற்போது வலிமை படத்தின் புரோமோஷன் பணிகளுக்காக சென்னையில் முகாமிட்டுள்ள போனி கபூர், 80ஸ் நடிகைகளுடன் பார்ட்டி கொண்டாடி உள்ளார். 80-களில் முன்னணி நடிகையாக இருந்த லிஸி சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் விருந்து வைத்தார்.
66
இதில் நடிகைகள் ராதிகா, குஷ்பு, ஷோபனா, ரம்யா கிருஷ்ணன், திரிஷா மற்றும் இயக்குனர் கவுதம் மேனன், நடிகர் இந்திரஜித் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் சிறப்பு விருந்தினராக போனிகபூரும் கலந்து கொண்டார்.