அஜித் படத்தை போட்ட போட்டி போட்டுக்கொண்டு பல முன்னணி நிறுவனங்கள் விலை பேசும் நிலையில்..பிரபல தொலைக்காட்சி ஒன்று இதுவரை ஒருமுறை கூட அஜித் படத்தை வாங்கலையாம்...
நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் அஜித் (Ajith) நடிக்கும் 2-வது படம் வலிமை. இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் (Boney Kapoor) தயாரித்துள்ளார்.
28
ajithkumar
குடும்ப செண்டிமெண்ட் நிறைந்த அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக வலிமை தயாராகி உள்ளது. இதில் அஜித் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஹீரோயினாக காலா பட நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார்.
38
ajithkumar
மேலும் யோகிபாபு, குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் வில்லன் கேரக்டரில் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா (Karthikeya) நடித்துள்ளார். யுவன் மற்றும் ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.
48
ajithkumar
அதன்படி வருகிற பிப்ரவரி 24-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய 4 மொழிகளில் இப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். ரிலீஸ் நெருங்கி வருவதால் இதற்கான புரமோஷன் பணிகளும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளன.
58
valimai ajith look
அந்த வகையில், கடந்த சில தினங்களாக வலிமை படத்தின் புரோமோ வீடியோக்கள் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வருகின்றன. அதில் வேறமாறி பாடல் புரோமோவை வெளியிட்டுள்ளனர். அதில் அஜித்தின் டான்ஸை பார்த்து ரசிகர்கள் மெர்சலாகிப் போய் உள்ளனர். இந்த புரோமோ வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
68
valimai ajith look
இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் வலிமை டிக்கெட் புக்கிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது...படம் ரிலீஸுக்கு பிறகு அடுத்த மூன்று நாட்களுக்கு டிக்கெட் கிடைக்க வாய்ப்பில்லை என்றும் சொல்லப்படுகிறது...
78
valimai ajith look
இந்நிலையில் அஜித் படத்தை போட்ட போட்டி போட்டுக்கொண்டு பல முன்னணி நிறுவனங்கள் விலை பேசும் நிலையில்..பிரபல தொலைக்காட்சி ஒன்று இதுவரை ஒருமுறை கூட அஜித் படத்தை வாங்கவில்லைஎன தகவல் வெளியாகியுள்ளது...
88
valimai ajith look
சிறுத்தை சிவா இயக்கத்தில், அஜித் நடிப்பில் வெளிவந்த விஸ்வாசம் திரைப்படம் தற்போது வரை சன் டிவியின் TRP ரேட்டிங்கில் முதல் இடத்தை பிடித்துள்ளது. அந்த அளவிற்கு தொலைக்காட்சியில் அஜித்தின் படங்களுக்கு மவுசு அதிகம்.ஆனால் விஜய் தொலைக்காட்சி மட்டும் இதுவரை ஒரு அஜித் படத்தை கூட .வாங்கவில்லையாம்..