Vijay car insurance controversy : அட ஜூன் வரை இருக்குதுங்க..இன்சூரன்ஸ் குறித்து விஜய் போட்டுடைத்த உண்மை...

Kanmani P   | Asianet News
Published : Feb 21, 2022, 04:05 PM ISTUpdated : Feb 21, 2022, 04:49 PM IST

Vijay car insurance controversy : உள்ளாட்சி தேர்தலில் வாக்களிப்பதற்காக விஜய் வந்த சிகப்பு நிற காருக்கு இன்சூரன்ஸ் இல்லை என கூறப்பட்டு வந்த நிலையில் ..இது தொடர்பாக விஜய் தரப்பு விளக்கமளித்துள்ளது..

PREV
18
Vijay car insurance controversy : அட ஜூன் வரை இருக்குதுங்க..இன்சூரன்ஸ் குறித்து விஜய் போட்டுடைத்த உண்மை...
vijay

தமிழகத்தில் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் மொத்தமுள்ள வார்டுகளிலும் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக மாநகராட்சி பகுதிகளில் 15,158 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன.

28
Vijay

நகராட்சி பகுதிகளில் 7,417 வாக்குச்சாவடிகளும், பேரூராட்சி பகுதிகளில் 8,454 வாக்குச்சாவடிகளும் தயார் நிலையில் உள்ளன. மாநிலம் முழுவதும் மொத்தமாக 31,150 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு இருந்தன. 

38
Vijay

வாக்குப்பதிவு மையங்களில் இன்று நடைபெறும் தேர்தலுக்காக 1 லட்சத்து 60 ஆயிரம் மின்னணு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அனைத்து வாக்குப்பதிவு மையங்களிலும் மின்னணு இயந்திரம் மூலமே வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

48
Vijay

இதில் பிரபலங்கள் பலரும் வாக்களித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது நடிகர் விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க நடிகர் விஜய் சிவப்பு நிற காரில் வந்தார். 

58
Vijay

அவரது இல்லத்தில் இருந்தே ரசிகர்கள் புடை சூழ வந்தார். நீலாங்கரை வேல்ஸ் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச் சாவடியில் நடிகர் விஜய் வாக்களித்தார்.

68
Vijay

கடந்த முறை சட்டமன்ற தேர்தல் நடைபெற்றபோது நடிகர் விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்தது பெரும் பேசுபொருளாக ஆன நிலையில், தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நடிகர் விஜய் சிவப்பு நிற சாண்ட்ரோ காரில் வந்து வாக்களித்தார்.

78
Vijay

சிறிய காரில் விஜய் வந்தது ஒருபுறம் இருந்தாலும் அந்த காருக்கு இன்சூரன்ஸ் செலுத்தப்படவில்லை என்ற சர்ச்சை எழுந்தது. விஜய் வந்த ஆல்டோ காரின் இன்சூரன்ஸ் காலவதியானதாகவும் கூறப்பட்டது. இதனால் சோஷியல் மீடியாவில் பலரும் விஜய்யை வறுத்தெடுத்தனர். அது தொடர்பான சில தகவல்களையும் பகிர்ந்தனர்.

88
Vijay

இந்நிலையில் இன்சூரன்ஸ் தொடர்பான சர்ச்சைக்கு விளக்கம் அளித்துள்ளது விஜய் தரப்பு. அதன்படி  விஜய் வந்த Maruti /Celerio ZXI மாடல் காருக்கு Own Damage இன்சூரன்ஸ், ஜூன் 16 2021 முதல் ஜூன் 15 2022 வரை உள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் Third party insurance 2019ம் ஆண்டு மே மாதம் 29 முதல் 2022 மே 28 வரை வரை உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விஜய் வந்த குறிப்பிட்ட கார் ஜோசப் விஜய் என்ற பெயரிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories