தற்போது நடிகை சமந்தா மகாகவி காளிதாஸ் எழுதிய புராணகதையான சாகுந்தலம் என்ற கதையில் நடித்து வருகிறார். இந்த கதையின் நாயகியான சகுந்தலா கேரக்டரில் நடிகை சமந்தா நடிக்கிறார். இந்த படத்தில் சமந்தா உடன் அதிதி பாலன், பிரகாஷ்ராஜ், மோகன்பாபு, மதுபாலா, கபீர் சிங் ஆகியோர் நடித்து வருகின்றனர். மேலும் குணசேகரன் இந்த படத்தை இயக்கி வருகிறார்.