அடக்கடவுளே...புனித் ராஜ்குமார் குடும்பத்தில் அடுத்த மரணம்..சோகத்தில் மூழ்கிய கன்னட திரையுலகம்..

Kanmani P   | Asianet News
Published : Feb 21, 2022, 11:57 AM IST

கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமாரின் மரணமே இன்னும் மறக்க இயலாத சோகமாக இருந்து வரும் நிலையில் ..அவரது வீட்டில் நடித்துள்ள திடீர் மரணம் குடும்பத்தாரை நிலை குலைய வைத்துள்ளது... 

PREV
18
அடக்கடவுளே...புனித் ராஜ்குமார் குடும்பத்தில் அடுத்த மரணம்..சோகத்தில் மூழ்கிய கன்னட திரையுலகம்..
puneeth rajkumar

கன்னட திரையுலகில் பவர் ஸ்டார் என்றழைக்கப்பட்ட முன்னணி நடிகரான புனீத் ராஜ்குமார் கடந்த செப்டம்பர் மாதம் 29-ந் தேதி அன்று மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருடைய மரணம் கன்னட திரையுலகை மட்டுமல்லாமல், கர்நாடக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

28
puneethrajkumar

.46 வயதில் அவருக்கு ஏற்பட்ட மரணத்தை யாராலும் ஜீரணிக்க முடியவில்லை. பெங்களூரு காண்டீரவா ஸ்டூடியோவில் உள்ள அவரது தந்தையும் நடிகருமான ராஜ்குமார், தாயார் பர்வதம்மாள் ஆகியோரின் சமாதிகளுக்கு அருகே புனீத் ராஜ்குமாரின் உடலும் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

38
puneeth rajkumar

நடிகர் புனீத் ராஜ்குமார் கடைசியாக நடித்த படம் ஜேம்ஸ். சேத்தன் குமார் இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர் புனீத் ராஜ்குமார், சீக்ரெட் ஏஜெண்டாக நடித்துள்ளார். மேலும் பிரியா ஆனந்த், சரத் குமார், ஆதித்யா மேனன், ஷிவராஜ் குமார் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

48
punith rajkumar

புனீத் ராஜ்குமார் மறைவுக்கு பின் வெளியாக உள்ள கடைசி படம் என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. இப்படம் வருகிற மார்ச் மாதம் 17-ந் தேதி புனீத் ராஜ்குமாரின் பிறந்தநாளன்று வெளியாக உள்ளது. 

58
puneeth rajkumar

இப்படம் வெளியாகும் தினத்திலிருந்து ஒரு வாரத்துக்கு வேறு எந்த கன்னட படமும் வெளியிடப்படக்கூடாது என கன்னட நடிகர் சங்கத்தினர் ஒருமனதாக முடிவெடுத்துள்ளனர்.

68
puneeth rajkumar

புனித் மறைவுக்குப் பிறகு அவரது ரசிகர்கள், கன்னட மக்கள் மற்றும் பல பிரபலங்கள் இன்றும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது மரண அதிர்ச்சியில் இருந்து புனித் மனைவி அஸ்வினி இன்னும் வெளியே வரவில்லை.

78
puneeth rajkumar

இந்நிலையில் அஸ்வினியின் குடும்பத்தில் மற்றொரு மரணம் நிகழ்ந்தது. புனித் ராஜ்குமாரின் மனைவி  அஸ்வினியின் தந்தையுமான ரேவநாத் மாரடைப்பால் காலமானார்.

88
puneethrajkumar

NHAI -யில் இன்சினீயராக பணியாற்றிய ரேவநாத்..புனித் மரணத்திற்கு பிறகு மிகுந்த மன அழுத்தில் இருந்துள்ளார்..இந்நிலையில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதை தொடர்ந்து நேற்று காலமாகியுள்ளார்..இவரது மரணம் புனித் குடும்பத்தை மேலும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது..

click me!

Recommended Stories