Valimai: அஜித் பிறந்த நாளில் காத்திருக்கும் செம்ம ட்ரீட்...வலிமை நாயகனுக்காக பட குழு எடுத்த அதிரடி முடிவு..!

Published : Apr 06, 2022, 02:55 PM IST

Valimai: வலிமை திரைப்படம், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வரும் மே 1ம் தேதி அதாவது அஜித்தின் பிறந்தநாள் அன்று ஒளிபரப்ப படக்குழு முடிவு செய்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

PREV
19
Valimai: அஜித் பிறந்த நாளில் காத்திருக்கும் செம்ம ட்ரீட்...வலிமை நாயகனுக்காக பட குழு எடுத்த அதிரடி  முடிவு..!
valimai

எச்.வினோத் இயக்கத்தில் அஜித்தின் வலிமை படம் இந்த வருடத்தில் செம ஹிட்டடித்த முதல் திரைப்படம் ஆகும். போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, ஜிப்ரான் பின்னணி இசையமைத்துள்ளார். 

29
valimai

இப்படத்தில் நடிகர் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக காலா பட நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். குக் வித் கோமாளி புகழ் உள்ளிட்ட நட்ச்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். 

39
valimai

இதில் படத்தின் இந்த படத்தில் இடம்பெற்ற, பைக் ரேஸ் காட்சிகள், சண்டைகாட்சிகள் சென்டிமெண்ட் போன்றவை அஜித் ரசிர்கர்களை பெரிதும் கவர்ந்து வருகிறது.

49
valimai

இந்த படத்தினை உலகம் முழுவதும் உள்ள அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


மேலும் படிக்க...Alya Manasa: ஆல்யா மானசா தன்னுடைய மகனை முதன்முறையாக... கையில் ஏந்தும் அழகிய தருணம்...நெகிழ்ச்சி வீடியோ..!

59
valimai

இது தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளில் வெளியாகி உள்ளது. ரசிகர்களின் பேராதரவை தொடர்ந்து வலிமை திரைப்படம் வசூலில் புதிய சாதனை படைத்திருந்தது. 

69
valimai

சுமார் ரூ. 150 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படத்தில், உலக அளவில் 200 கோடிக்கு மேல் வசூலித்து ஹிட் பட லிஸ்டில் உள்ளது.

79
valimai

இதனிடையே, 2019ம் ஆண்டு விஸ்வாசம் திரைப்படத்திற்கு பிறகு, கடந்த மாதம் 24ஆம் தேதி ரீலிஸ் செய்யப்பட்ட வலிமை திரைப்படம், திரையரங்குகளை தாண்டி OTTயிலும் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. 

89
valimai

இந்நிலையில், படம் விரைவில் தொலைக்காட்சியில், ஒளிபரப்ப படக்குழு முடிவு செய்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

99
valimai

அதன்படி, வலிமை திரைப்படம், ஜீ தமிழ் தொலைகாட்சியில் வரும் மே 1ம் தேதி அதாவது அஜித்தின் பிறந்தநாள் அன்று ஒளிபரப்பாக இருப்பதாக கூறப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories