12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியானது. இதில் திண்டுக்கல்லை சேர்ந்த நந்தினி என்கிற மாணவி 600-க்கு 600 மதிப்பெண் பெற்று சாதனை படைத்தார். பிளஸ் 2 பொதுத்தேர்வில் வரலாற்று சாதனை படைத்த மாணவி நந்தினிக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அந்த மாணவியை நேரில் அழைத்து பாராட்டியதோடு, அவருக்கு எந்த உதவிகள் வேண்டுமானாலும் செய்ய தயாராக இருப்பதாக கூறி இருந்தார்.
சொன்னபடியே திண்டுக்கல்லுக்கு சென்ற கவிஞர் வைரமுத்து, அங்கு பொன்சீனிவாசன் தெருவில் உள்ள மாணவி நந்தினியின் இல்லத்திற்கு சர்ப்ரைஸாக சென்று தங்கப்பேனாவை பரிசாக வழங்கினார். வைரமுத்துவின் திடீர் வருகையால் உற்சாகத்தில் திளைத்துப்போன மாணவியின் குடும்பத்தினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மாணவியை ஊக்கப்படுத்தும் விதமாக கவிஞர் வைரமுத்து, இந்தப்பரிசை வழங்கி உள்ளாராம்.
முன்னதாக நந்தினியை தங்கை என குறிப்பிட்டு கவிஞர் வைரமுத்து டுவிட்டரில் பதிவிட்டிருந்தது கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டது. பேத்தி வயதில் இருக்கும் பெண்ணை தங்கை என அழைக்கலாமா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இந்த விமர்சனங்களையெல்லாம் கண்டுகொள்ளாத வைரமுத்து, தான் சொன்னபடியே நேரில் சென்று தங்கப்பேனாவை பரிசாக வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... பொன்னியின் செல்வன் நடிகைகளை தட்டிதூக்க பிளான் போடும் அஜித்... ‘விடாமுயற்சி’ பட ஹீரோயின் இவரா?